உத்திரகாண்டில் பனிச்சரிவு…! 8 உடல்கள் கண்டெடுப்பு…! 384 பேர் மீட்பு..!

இந்திய- சீன எல்லைக்கு அருகே உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் நிட்டி பள்ளத்தாக்கு அருகே  நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4-5 இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த பனிப்பாறை சரிவு பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க பிஆர்டிஎஃப் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு   வருகின்ற நிலையில், இந்த பனிச்சரிவில் சிக்கிய 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சம்னா-ரிம்கிம் சாலையில் அமைந்துள்ள சம்னா கிராமத்திலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மீட்புப் பணிகள் இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.