“நான் அதிகம் மனமுடைந்து போனேன்.. அறைக்கு செல்லமுடியவில்லை” ரஸல் உருக்கம்!

“நான் அதிகம் மனமுடைந்து போனேன்.. அறைக்கு செல்லமுடியவில்லை” ரஸல் உருக்கம்!

“எனது விக்கெட்டை இழந்ததும், அதிகமாக மனமுடைந்து போனேன், உணர்ச்சிவசப்பட்டேன். இதனால் என்னால் அறைக்குச் செல்ல முடியவில்லை” என்று படியில் அமர்ந்த காரணம் குறித்து ரஸல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15-ம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில்நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 220 ரன்கள் எடுத்தனர். அதன்பின் களமிறங்கிய கொல்கத்தா அணி, 19.1 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 202 ரன்கள் எடுத்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் தொடக்கத்திலே கொல்கத்தா அணி விக்கெட்களை இழந்து வந்த நிலையில், ரஸல் களமிறங்கினார். அவருடன் தினேஷ் கார்த்திக் இணைந்து அதிரடியாக ஆடிவந்தார். சென்னை அணி சார்பாக ஷர்துல் தாக்கூர், வைடு ஆஃப் ஸ்டம்பை நோக்கி வீசினார். இதனால் ரஸல், அடுத்து வரக்கூடிய பந்துகள் அவ்வாறு வரும் என்று எண்ணி ஆட ஆரமித்தார்.

அவரையடுத்து சாம் கரண் பந்துவீச, ஆஃப் சைடில் பீல்டிங் செட் செய்தார். வைடு ஆஃப் ஸ்டம்பில்தான் பந்து வீசுவார் என்று ரஸல் எண்ணிய நிலையில், ஆஃப் சைடில் ஒதுங்கி நின்று அந்த பந்தை ஆட முயற்சித்தார். ஆனால் பந்து, லெக் ஸ்டம்புக்கு நேராக வந்தது. அதனை தவறாக வைடு என நினைத்து பந்தை விட்டார். அது நேரடியாக ஸ்டம்ப்பில் பட்டு, போல்ட் ஆகி ரஸல் வெளியேறினார். அவுட் ஆன விரத்தியில் ரஸல் பெவிலியன்க்கு செல்லும் படிக்கட்டில் உட்காந்தார்.

அவர் களத்தில் நின்று விளையாடினால் நிச்சியம் கொல்கத்தா அணி அந்த போட்டியில் வெற்றிபெற்றிருக்கும். அவர் படியில் அமர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இதர கிரிக்கெட் வீரர்கள் வருத்தமடைந்தனர். இந்நிலையில், படிக்கட்டில் அமர்ந்த காரணம் குறித்து ரஸல் மனம்திறந்து பேசியுள்ளார்.

அப்பொழுது, “எனது விக்கெட்டை இழந்ததும், அதிகமாக உணர்ச்சிவசப்பட்டேன். என்னால் அறைக்குச் செல்ல முடியவில்லை. அப்படி ஒரு பந்தை தவற விட்டு அவுட்டாகியதால், எனது அணியின் சக வீரர்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் நான் எனது அணியை வெற்றிப்பெற செய்திருக்க வேண்டும். ஆனால் நான் எனது வேலையை சரியாக முடிக்கவில்லை. இதனால் நான் அதிகம் மனமுடைந்து போனேன்.

ஆயினும் நான் அதிக வலிமையுடன் இருந்தேன். இதுபோன்ற சூழ்நிலையில் நாம் அவுட்டானால், கோபம் தான் வரும். ஆனால் இந்த போட்டிக்கு பிறகு சற்று வித்தியாசமாக இருந்தேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube