“SRH பேமிலியை நான் ரொம்ப மிஸ் பன்றேன்.. என்ன சொல்லனு தெரியல”- நடராஜன் உருக்கம்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதகாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் 2 … Read more

#IPL2021: முதலிடத்தில் பெங்களூர்.. ஆரஞ்சு கேப் வாங்கிய தவான், பர்பிள் கேப் ரேஸில் ஹர்ஷல் படேல் முன்னிலை!

14-ம் சீசனுக்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் வைத்திருக்கும் வீரர்கள் குறித்து காணலாம். 2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், கொரோனா பரவலுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி, அதிரடியாக வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் முதலிடம் பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதனைதொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணியின் … Read more

#Breaking: 4 பேருடன் விண்வெளிக்கு புறப்பட்ட எலான் மஸ்கின் “பால்கன் 9” ராக்கெட்..நாசா புதிய சாதனை!

கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியது. இதற்காக நாசா, “crew 2” என்ற திட்டத்தை கொண்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதே இந்த  திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் … Read more

#IPL2021: கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் அணியுடன் இணைந்த அக்சர் படேல்!

ஐபிஎல் தோடன்றில் டெல்லி அணி சார்பாக விளையாடும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல்க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்பொழுது அவர் குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்தார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வலம் வருபவர், அக்சர் படேல். ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில்,அவருக்கு ஏப்ரல் 3-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவருவதற்காக சிகிச்சை பெற்று வந்தார். … Read more

பின்னடைவில் ஹைதராபாத்.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய “யாக்கர் மன்னன்”???

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் நடராஜன், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராசன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடினார். இந்த தொடரில் நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவருக்கு … Read more

“ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்”- டெல்லி அரசு வலியுறுத்தல்!

நாட்டில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஓப்படைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் டெல்லியில் நாள் ஒன்றுக்கு 25,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாகவும், ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் … Read more

“ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது”- கருத்து கேட்பு அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பு!

தூத்துக்குடியில் இன்று காலை நடந்த கருத்துக்கணிப்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அந்த அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், ஆலையை திறக்கக்கூடாது என்று தமிழக அரசு … Read more

புதிய MacBook டிசைன்கள் ஹேக்.. 1-ம் தேதி வரை அவகாசம் கொடுத்த ஹக்கர்ஸ்! அதிர்ச்சியில் ஆப்பிள்!

ஆப்பிள் மேக்புக்-ன் புதிய டிசைன்களை ரஷ்யாவை சேர்ந்த REvil என்ற ஹாக்கர்ஸ் குழு, ஹேக் செய்து, 50 மில்லியன் டாலர் ransom தொகையை கேட்டு மிரட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனம், நேற்று தனது “Spring Loaded” நிகழ்ச்சியில் தனது புதிய பொருட்களான ஐ-மேக், ஐ-பேட், ஐ-போன் 12 மற்றும் 12 மினியின் புதிய நிறங்கள், ஏர் டேக் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது. இதனைதொடர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்த ஆப்பிள் நிறுவனத்திற்க்கு திடீரென ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. … Read more

“18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்”- அசாம் அரசு அதிரடி அறிவிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 45 … Read more

“எனது நண்பரின் தாயாருக்கு உடனடியாக உதவி தேவை”- ராகுல் தெவாத்தியா ட்வீட்!

இந்தியாவில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தனது நண்பரின் தாயாருக்கு ரெம்டெசிவிர் மருந்து உடனடியாக தேவைப்படுவதகாக ராகுல் தெவாத்தியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா இரண்டாம் அலையில் முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. … Read more