INDvsBAN TestSeries: சாகிர் ஹசன் சதம்! 4-வது நாள் முடிவில் வங்கதேசஅணி 272/6 ரன்கள் குவிப்பு.

இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசஅணி 272/6 ரன்கள் குவிப்பு.  இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 410 ரன்களுக்கும், வங்கதேச அணி 150 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. 254 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்து 512 ரன்கள் … Read more

IND Vs SL: குல்தீப் யாதவ் அவுட்: முக்கிய வீரர் சேர்ப்பு-பிசிசிஐ அறிவிப்பு..!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து,  பெங்களூருவில் மார்ச் 12 முதல் 16 வரை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு சேர்த்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் அக்சர் படேல் இணைந்தவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் … Read more

#IPL2021: கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் அணியுடன் இணைந்த அக்சர் படேல்!

ஐபிஎல் தோடன்றில் டெல்லி அணி சார்பாக விளையாடும் ஆல்-ரவுண்டர் அக்சர் படேல்க்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்பொழுது அவர் குணமடைந்து, மீண்டும் அணியுடன் இணைந்தார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வலம் வருபவர், அக்சர் படேல். ஐபிஎல் தொடர் தொடங்கும் முன் இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில்,அவருக்கு ஏப்ரல் 3-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவருவதற்காக சிகிச்சை பெற்று வந்தார். … Read more

டெல்லி அணிக்கு பின்னடைவு.., அக்சர்படேலுக்கு கொரோனா..!

டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. டெல்லி அணி ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பு டெல்லிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டெல்லி அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி அணி ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், அக்சர்படேலுக்கு கொரோனா உறுதி … Read more

INDvENG: 6 விக்கெட்களை வீழ்த்திய அக்சர் படேல்.. 112 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து!

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் இங்கிலாந்து அணி, 112 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் க்ராலி – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே … Read more

#Cricket Breaking:இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அக்சர் படேல் விலகல் – பிசிசிஐ

இந்தியா ஆல்ரவுண்டர் அக்சர் படேல் முழங்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ இன்று தெரிவித்துள்ளது. அவரை பி.சி.சி.ஐ மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது, அவரது விரிவான அறிக்கைகள் காத்திருக்கின்றோம் என்றும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளது.27 வயதான அக்சர் படேல் அவர் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சியின்  போது தனது இடது முழங்காலில் வலி இருப்பதாக கூறியிருந்தார்.