#Breaking: தமிழகத்தில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது!

தமிழகத்தில் ஞாயிற்றுகிழமை தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது என்றும், இப்போதுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து, மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 13,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக இன்று மாலை மேலும் சில கட்டுப்பாடுகள் குறித்த செய்திக்குறிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதில், தமிழகத்தில் தற்பொழுது உள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்து, கூடுதலாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது. இதில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மற்றும் பெரிய கடைகள் மூடுவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும், அது எந்தெந்த தேதிகளில் இருந்து அமலாகும் என்ற அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், ஞாயிற்றுகிழமைகளை தொடர்ந்து, திங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்ற தகவல்கள் பரவிவரும் நிலையில், அது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ஞாயிறு தவிர மற்ற நாட்களில் முழு பொதுமுடக்கம் கிடையாது என்றும், முழு முடக்கத்திற்கான வாய்ப்புகள் தற்பொழுது வரை இல்லையெனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.