நிதித்துறையும், ஊடகதுறையும் அமைதியானால் நிறைய பிரச்சினைகள் வரும்….உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்…!!

நீதித்துறையும், ஊடகமும் கண்மூடி இருந்துவிட்டால், நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். கேரளாவில் 1953 ஆம் ஆண்டு பிறந்த இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக சிறப்பாக செயலாற்றிய பெருமைக்குரியவர். தமது பதவிக் காலத்தில் தீவிரவாதி அப்சல் குரு தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்புகளை வழங்கினார். நாட்டில் பெரிதும் பேசப்பட்ட நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் நீதிபதிகள் லோதா, நாரிமன் ஆகியோருடன் இணைந்து வழக்கை சிபிஐக்கு மாற்றி … Read more

தூய்மையற்ற கட்சி… காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி மீது ராஜ்நாத் சிங் சாடல்…!!

தெலுங்கானாவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் கூட்டணி தூய்மையற்றது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் சட்டமன்ற தேர்தல் வர இருக்கையில் வனபார்தி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,  பாரதீய ஜனதா கட்சி மதம் மற்றும் சாதியை கொண்டு அரசியல் செய்வதில்லை என்றும் அனைவரையும் வலிமை பெறச் செய்ய உறுதிப்பூண்டிருப்பதாகவும் கூறினார். அதனால், பா.ஜ.க குறித்து சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை உருவாக்க … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6.52 காசுகளாக குறைப்பு…!!

வெகு நாட்களுக்கு பிறகு மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 6 ரூபாய் 52 காசுகள் குறைத்ததுடன், மானியமில்லாத சிலிண்டரின் விலையை 133 ரூபாய் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன கடந்த இரண்டு மாத காலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைந்து வருகிறது. ஆனால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவில்லை. இதனால் பொது மக்களிடையே அதிருப்தி நிலவியது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் 6 மாதத்திற்கு பிறகு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை … Read more

பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தொழில் புரட்சி செய்யவுள்ளது – பிரதமர் மோடி புகழாரம்…!!

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் இணைந்து புதிய தொழில்புரட்சியை உருவாக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாட்டுக்காக அர்ஜெண்டினா சென்றுள்ள பிரதமர் மோடி, சீனா அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். இந்த ஆண்டில் இருவருக்குமான 7-வது சந்திப்பு இதுவாகும். சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானையும் அவர் சந்தித்தார். இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த மோடி, தீவிரவாதம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான … Read more

மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடி….தமிழிசை சவுந்தரராஜன்

மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய அரசின் மூலமாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதை ஏற்பாடு செய்துவிட்டதாக கூறியுள்ளார். தென்னை மரங்களை அகற்ற மத்திய அரசு உதவி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கான தொகையை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது … Read more

காவல் துறை அமைச்சு பணியாளர்களின் விளையாட்டு போட்டிகள்…..!!

தமிழ்நாடு காவல் துறையின் அமைச்சு பணியாளர்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள், 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சோழிங்கநல்லூர் அடுத்துள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் தொடங்கிய இந்த போட்டிகளை காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி, புறாக்களை பறக்கவிட்டு தொடக்கி வைத்தார். அமைச்சுப் பணியாளர்களின் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கபடி, இறகு பந்து, கூடைப்பந்து, … Read more

பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை …!சீமான்

பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று  நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், சாதிய ஆணவத்தோடும், ஆணாதிக்கத்தோடும் என எதன்பொருட்டும் பெண்கள் மீதானத் தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. இவற்றில் ஈடுபடும் கொடுங்கோலர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிப் பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றும்  நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிவுறுத்திய மாற்றுதிறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை பாஜக அரசு செய்யவில்லை…!ஜி.ராமகிருஷ்ணன்

ஐ.நா அறிவுறுத்திய மாற்றுதிறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை பாஜக அரசு செய்யவில்லை என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  மாநிலச் செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  மாநிலச் செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ஐ.நா அறிவுறுத்திய மாற்றுதிறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை பாஜக அரசு செய்யவில்லை .ஆனால் பொய் பிரச்சாரமாக மாற்று த்திறனாளிகளை தெய்வப்பிறவிகள் என கூறுவது ஏமாற்கு வேலை. உடனடியாக ஐ.நா. வலியுறுத்திய திட்டங்களை அரசு செய்ய வேண்டும் என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  மாநிலச் செயலாளர்  ஜி.ராமகிருஷ்ணன் … Read more

சேதமைடைந்த காய்கறி கடைகளுக்கு பதில்புதிய கடைகள்….சேவூர். எஸ்.ராமச்சந்திரன் தகவல்…!!

ஆரணி நகராட்சியில் தொடர்மழையினால் சேதமடைந்த காய்கறி கடைகள் 2 கோடியே 37 லட்சம் செலவில் புதிதாக கட்டப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ். இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர் மழையின் காரணமாக ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி காய்கறி மார்கெட் கடைகள் கடுமையாக சேதமைடைந்தன. இதனால், வியாபாரம் செய்ய இடம் இல்லாமல் வியாபாரிகளும் காய்கறிகளை வாங்கமுடியாமல் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ். ராமச்சந்திரன் மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்து நகராட்சி … Read more

தத்தெடுத்த கிராமத்திற்கு உரிய நிவாரண நிதியை வழங்கவில்லை…நடிகர் விஷால் மீது குற்றச்சாட்டு…!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கார்கா வயல் கிராமத்தை தத்தெடுத்த நடிகர் விஷால், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், தமிழக அரசு சிறப்பு முகாம் அமைத்து அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றன. இதேபோல், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வந்தனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டம் கார்கா வயல் கிராமத்தை, … Read more