தினகரனை கடுப்பேத்திய நிருபர்கள்!ஆக்ரோஷமாக சீரிய தினகரன் ….

ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினரான டிடிவி.தினகரன் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் கோவமாக பதில் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் பெங்களூரூ பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சசிகலாவைச் சந்திக்கும் நேரத்தின் அளவு குறித்து கேள்வி எழுப்பிய ஆங்கிலத் தொலைக் காட்சி செய்தியாளர், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் உள்ளே இருப்பதாக கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட அறிக்கையில் உள்ள நேரத்திற்கும், உண்மையில் … Read more

தினகரன் கடன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாற்றை உருவாக்கியவர் !

ஆர்.கே. நகர் இடைதேர்தலில் தினகரன் வெற்றிபெற்றதில் இருந்து பல்வேறு கருத்துகள் உலாவி வருகின்றனர் .இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் அவரை குறித்து கருத்து கூறியிருந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரும் கருத்து கூறியுள்ளார். கடன் சொல்லி ஓட்டு கேட்ட வரலாறு எங்கும் நடந்தது இல்லை என ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனை, அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். ஆர்.கே.நகர் மக்கள் ரூ.10 ஆயிரம் கேட்டு தினகரனை தேடி வருவதாகவும் கூறினார். மக்களை நம்பியே நாங்கள் உள்ளோம், பணத்தை நம்பி இல்லை என்ற … Read more

சினிமாவில் எழுதிகொடுக்கும் வசனம் அல்ல அரசியல் …தினகரன் கமலுக்கு பதிலடி ….

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக நன்றி சொல்லி வருகிறார். இன்று ஆர்.கே.நகரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் கமல்ஹாசன் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது: “வென்றவர்களை குறைச்சொல்கிறேன் என்கிற போர்வையில் கமல்ஹாசன் மக்களை சாடுகிறார். அவர் ஒரு நடிகராக இருக்கிறார். அரசியல் களம் தன்மை புரிந்து பேசுகிறாரா? புரியாமல் பேசுகிறாரா? எனத் தெரியவில்லை. விஷால் துணிச்சலாக தேர்தலில் குதித்தார். அவரை சதி செய்து போட்டியிடவிடவில்லை. இவர் கட்சி … Read more

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா! கமலஹாசன் கண்டனம்…..

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டதற்கு கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி தரப்பில் ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.6,000 தரப்பட்டது என்று கூறியுள்ளார். சுயமாக வளர்ந்த சுயேட்ச்சை ரூ.2,000 தந்து ஒவ்வொவொரு ஒட்டுக்கும் விலை நிர்ணயம் செய்துள்ளார். மேலும் அதிக விலை நிர்ணயித்த சுயேட்சைக்கு பொத்தானை வாக்காளர்கள் அலுத்தியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். source: dinasuvadu.com

நான் சட்டப்பேரவையில் பேசினால் அன்றே அலறத்தொடங்குவார்கள் அதிமுகவினர் …….

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தட்டன்கோவிலில் உள்ள குலதெய்வம் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு நடத்துவதற்காக அவர் அங்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தினகரன், சட்டப்பேரவையில் தான் என்ன பேச போகிறேன் என்பதை பொறுத்திருந்து பார்க்குமாறு கூறினார்.அதிமுகவினர் தோல்வி பயத்தால் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பதாக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்… source: dinasuvadu.com

ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார்!

ஆர்.கே.நகரில் அனைத்து நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும் என ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் 6,500 விசைப்படகுகளில் டிரான்ஸ்மீட்டர் கருவி பொருத்தப்படும். மேலும் ஆன்மீக அரசியல் குறித்து ரஜினிதான் விளக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது எடுத்தாலும் தயாராக இருக்கிறோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ஆர்.கே.நகரில் பேட்டியளித்துள்ளார். source: dinasuvadu.com

புதிய பேரவை தொடங்கும் திட்டத்தில் டி.டி.வி.தினகரன்

அதிமுகவிலிருந்து தனது ஆதராவாளர்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டு வருவதால், தினகரன் அணி தனியாக பேரவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தினகரன் அணி தனது ஆதராவளர்களுடன் இணைந்து புதிய பேரவை தொடங்கி நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு பதவியும் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். source : dinasuvadu.com

எட்டு மாதங்களாக நடந்த ஆர்கே நகர் இடைதேர்தல் : 2017 ஆர்கே நகர் ஓர் ரீவைண்ட்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரின் தொகுதியான ஆர்கே நகருக்கு தேர்தல் நடத்துவதற்குள் தேர்தல் ஆணையமே ஸ்தம்பித்து போனது. அந்த அளவுக்கு கட்சிகளின் டார்ச்சர் இருந்தது. இந்த தொகுத்திக்கு தேர்தல் நடக்குமா என ஆர்கே நகர் மக்கள் மட்டுமல்லாது, தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். மேலும் பலர் தங்களுக்கு ஆர்கே நகரில் ஒட்டு இல்லையே என வருத்தப்பட்டனர். காரணம் அந்த அளவுக்கு பணபட்டுவாடாவும் படு ஜோராக நடந்தது. இந்த பணபட்டுவாடா தான் தேர்தலை ரத்து … Read more

மூட்டைபூச்சியை விட ஆபத்தான டெங்கு கொசுக்கள் அமைச்சரவையில் உள்ளது : தினகரன்

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியில், தினகரனை மறைமுகமாக திட்டுவதாக கூறி மூட்டைபூச்சிகெல்லாம் பதில் சொல்லமுடியாது என் கூறினார். இதற்க்கு பதிலளிக்கும் வகையில், தினகரன் அளித்த பேட்டியில், ‘அமைச்சர் ஜெயகுமார் பேசுவதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. என்றும், மூட்டைபூச்சியை  விட ஆபத்தானது டெங்கு கொசு. டெங்கு கொசுதான் இன்று அமைச்சரவையில் இருக்கின்றன. மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்தால் அமைச்சரவையில் இருக்கின்றனர். என்றும் விமர்சனம் ச்வேய்துள்ளார். source : dinasuvadu.com 

தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் விசாரணை ஆணையத்திடம் ஜெ. வீடியோ ஒப்படைப்பு!

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், கடந்த 20ஆம் தேதி வெளியிட்டார். இதுதொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், வெற்றிவேல் மீது, போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தரப்பிலும், வெற்றிவேல் மீது, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை அளிக்குமாறு, வெற்றிவேலுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா சிகிச்சை வீடியோ நகலை, வெற்றிவேல் தரப்பில், … Read more