மின்வாரியத்துக்கு நிதிநிலைமைக்கு ஏற்ப பட்ஜெட்டில் நிதி !

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, நிதி நிலைமைக்கு ஏற்ப தமிழக பட்ஜெட்டில் மின்சார வாரியத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நிதி குறைப்பால் வாரியத்துக்கு பாதிப்பு இல்லை என்றும்  கூறியுள்ளார். நாமக்கல்லில் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் வேளாண்மைக் கண்காட்சியினை திறந்து வைத்து அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில், விவசாயிகள் சாகுபடி செய்துவரும் பாரம்பரிய ரகங்களான நெல், கம்பு, திணை, வரகு, காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் அதன் பராமரிப்பு குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. … Read more

சிறு பிள்ளைத்தனமாக கொடி விஷயத்தில் நடந்து கொள்கின்றனர்!

ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி விவகாரத்தில், சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்வதாக  தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை எதிர்க்கத் தொடங்கியிருப்பதாகவும், நாடு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியை பல்வேறு கட்சிகள் எதிர்ப்பதாகவும் கூறினார். அதிமுகவில் ஆரம்ப காலத்திலிருந்து பொதுச்செயலாளர் பதவி தான் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற பதவி என்றும், தாம் கட்சி ஆரம்பித்தால், கட்சி விதிப்படி பதவியை இழுந்துவிடுவேன் … Read more

திருச்சியில் டிடிவி தினகரன் கட்சியின் முதல் ஆலோசனைக் கூட்டம்!

திருச்சியில் வரும் 24-ஆம் தேதி டிடிவி தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம்  நடைபெறுகிறது. இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை வாழ வைக்கவும், அதிமுகவை மீட்டெடுக்கின்ற லட்சியத்தோடும், மேலூர் பொதுக் கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி திருச்சி பெமினா ஹோட்டல் காவிரி அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும். … Read more

அடுத்த ஆப்பு தினகரனுக்கு ரெடி ?தினகரனின் கட்சிக்கொடிக்கு ஆப்புவைத்த அதிமுக …..

அ.தி.மு.க சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக  ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நேற்று(மார்ச்.15) தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை மதுரை மேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி கட்சியின் பெயர் “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என அறிவிக்கப்பட்டது. கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களும், மத்தியில் ஜெயலலிதாவின் உருவப்படமும் பொருந்திய கட்சியின் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து தினகரனின் கட்சிக்கொடிக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று … Read more

கூகுள் மேப்(Google Maps) பிளஸ் புதிய சிறப்பம்சம்: 6 இந்திய மொழிகள் மற்றும் துல்லியமாக(accurate location finder) இடத்தை காட்டுதல்.!

  நாடு முழுவதும் முகவரி தேடல் எளிதாக்குவதற்காக, கூகுள் இந்தியா பிளஸ் குறியீடுகள் மற்றும் பிற புதிய அம்சங்களை மேப்ஸிற்கு பரவலாக்குகிறது. கூகிள் ஆறு கூடுதல் இந்திய மொழிகளை – பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம்  சேர்த்துள்ளது. பிளஸ் குறியீடுகள் அம்சம் – திறந்த இருப்பிட குறியீடு(Open Location code) என்றும் அழைக்கப்படுகிறது, இது 2014 ஆம் ஆண்டு முதல் நேரடி ஒளிபரப்பாகும் – திறந்த மூல மற்றும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் … Read more

குரங்கணி காட்டுத்தீயை வனத்துறை தடுக்காமலும் அலட்சியமாக இருந்ததே உயிரிழப்புக்கு காரணம்!

9 பேர்  தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருக்கின்றனர்.மேலும்  15 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில்  சென்னையை சேர்ந்த ஐந்து பேர், கோவையை சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிளந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து , மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோரை தமிழக அரசின் வனத்துறை தடுக்காமலும் அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் இனி மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு, வழிகாட்டிகள் நியமனம் போன்ற விதிமுறைகள் மற்றும் … Read more

குக்கரை பாதுகாக்க டிடிவி தினகரன் கேவியட் மனு தாக்கல்!

உச்சநீதிமன்றத்தில் குக்கர் சின்னம் விவகாரத்தில்  கேவியட் மனு தாக்கல் செய்தார் டிடிவி தினகரன். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டால் தனது கருத்தை கேட்க கோரிக்கை அதிமுக தரப்பில் நாளை அல்லது நாளை மறுநாள் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதால் தினகரன் மனு  அளித்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் , ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கோரும் கட்சியின் பெயர், சின்னத்தை ஒதுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு,உத்தரவிட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.   மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அதிமுக எம்.பி.க்கள் பதவி ஆசையால் ராஜினாமா முடிவுக்கு தயக்கம்!

ஆர்.கே. நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் பதவி ஆசையின் காரணமாகவே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விவகாரத்தில்,  அதிமுக எம்பிக்கள் ராஜினாமா முடிவை எடுக்க முதலமைச்சர் தயங்கி வருவதாக  குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களுடன் பேசுகையில், அவர் இவ்வாறு சாடினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

டி.டி.வி.தினகரன் தகவல்…புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும்….

வருகிற 15ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டிடிவி தினகரன்  புதிய கட்சியை தொடங்குகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவை மீட்டெடுக்கும் வரை, அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் இயக்கமாக தொடர்ந்து பயணிப்பதற்கான பெயரையும், சின்னத்தையும் வேண்டி டெல்லி உயர்நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து வருகிற வியாழக்கிமை அன்று மதுரை மாவட்டம் மேலூரில் காலை 9 மணி அளவில் நடைபெறும் விழாவில், புதிய கட்சியின் பெயரை அறிவித்து கொடியை அறிமுகப்படுத்த உள்ளதாக … Read more

டிடிவி தினகரன் கணிப்பு !தமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி கவிழும்…

டிடிவி தினகரன் தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி 3 மாதங்களில் கவிழும் என  தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் இன்று தஞ்சாவூரில் மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கினார். புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வழிபாடு நடத்திய பின், ஏழை எளியோருக்கு மூன்றுசக்கர வண்டிகள், தையல் எந்திரங்கள், குக்கர் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தஞ்சாவூர் மாவட்டத்தில் சத்துணவுப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.