நியூசிலாந்தில் மிரட்டும் மாஸ்டர் முன்பதிவு – வசூல் நிலவரம் தெரியுமா?

நியூசிலாந்து நாட்டில் மாஸ்டர் படத்தின் முன்பதிவு இதுவரை 55 ஆயிரம் டாலருக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டு, மிகப் பெரும் சாதனையை படைத்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இந்த படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்திற்கான முன்பதிவுகள், டிக்கெட் … Read more

கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது நியூசிலாந்து!

கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது நியூசிலாந்து. முதலில் சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால்  உலக அளவில் இதுவரை, 7,091,634 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 406,192 பேர் உயிரிழந்துள்ளனர்.   இந்நிலையில், நியூசிலாந்து நாட்டு கொரோனா இல்லாத நாடக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு பின், அங்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனையடுத்து, அங்கு இந்த வைரஸை  … Read more

நியூசிலாந்து மசூதி துப்பாக்கிசூடு! குற்றத்தை ஒப்புக்கொண்ட பயங்கரவாதி!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கிச்சூட்டை  முகநூல் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பினார். அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா, இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் தான் என உறுதி செய்தார். இதனையடுத்து, அந்நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.  ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) … Read more

நியூசிலாந்து அணிக்கு அபாரதமா.? அதுவும் சம்பளத்தில் இருந்து 60 சதவீதம்.!

நேற்று( சனிக்கிழமை) நடைபெற்ற இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது, நியூசிலாந்து அணி மூன்று ஓவர்கள் தாமதமாக பந்துவீசியதாக 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் 5 டி20 போட்டிகள் விளையாடியது. அதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 5:0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துடன் 3 ஒரு நாள் போட்டிகள் விளையாடி வரும் இந்திய … Read more

கோப்பை வென்ற கையுடன் நியூசிலாந்திற்கு கோலி தலைமையில் இந்திய அணி பயணம்.!

விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2:1 என்ற கணக்கில் முடித்தது. அடுத்து நியூசிலாந்துடன் 5, T20 போட்டி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று பெங்களூருவில் இருந்தே நியூசிலாந்து புறப்படுகிறது. இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இறுதி போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்று அபாரமாக விளையாடி வெற்றியை சூட்டியது. … Read more

கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய நியூசிலாந்து அரசு!

பல நாடுகளில் கருக்கலைப்பை என்பது ஒரு பெண்ணின் உரிமையாக இருந்து வந்த நிலையில், நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. இதனையடுத்து அந்நாட்டுபெண்கள் உடல் ரீதியிலோ அல்லது மனரீதியிலோ ஆபத்து இருக்கும் நிலையில், இரண்டு மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர், அவர்கள் அனுமதியுடன் பரிசோதனை செய்து கொள்ளலாம். நியூசிலாந்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து … Read more

உலகிலேயே மிகவும் செங்குத்தான நிலையில் இருக்கும் சாலை இது தான் !

பிரிட்டன் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சாலை ஒன்று  உலகிலே மிக செங்குத்தான சாலை என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு முன்னர் நியுசிலாந்து நாட்டில் ட்யூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை தான் மிகவும் செங்குத்தான சாலை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தது. 35 சதவிகித அளவிற்கு செங்குத்தாக இருக்கும் அந்த சாலையை பின் தள்ளி தற்போது பிரிட்டன் நாட்டு சாலை முன்னுக்கு வந்துள்ளது. வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஹார்லெச் நகரத்தில் இருக்கும் அந்த … Read more

அமெரிக்க அதிபருக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பெண் எம்.பி க்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி க்களிடம் அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இருக்க விருப்பம் இல்லையென்றால் சொந்த நாட்டிற்கு செல்லுங்கள் என்று சர்ச்சை ஏற்படுத்தும் விதமாய் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அவரது இந்த கருத்துக்கு உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு  தலைவர்கள் கடும் … Read more