உலகிலேயே மிகவும் செங்குத்தான நிலையில் இருக்கும் சாலை இது தான் !

உலகிலேயே மிகவும் செங்குத்தான நிலையில் இருக்கும் சாலை இது தான் !

பிரிட்டன் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சாலை ஒன்று  உலகிலே மிக செங்குத்தான சாலை என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்க்கு முன்னர் நியுசிலாந்து நாட்டில் ட்யூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை தான் மிகவும் செங்குத்தான சாலை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தது. 35 சதவிகித அளவிற்கு செங்குத்தாக இருக்கும் அந்த சாலையை பின் தள்ளி தற்போது பிரிட்டன் நாட்டு சாலை முன்னுக்கு வந்துள்ளது.

வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஹார்லெச் நகரத்தில் இருக்கும் அந்த சாலை 37.5 சதவிகிதம் செங்குத்தாக இருக்கிறது. போர்ட் பென்லெச் பகுதியில் இருக்கும் அந்த சாலை மிக செங்குத்தான சாலை என்ற உலக சாதனையை கடந்த 6ம் தேதி படைத்துள்ளது. 33 அடி அகலமும் இரு பக்கம் வீடுகளும் இருக்கும் அந்த சாலை உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

 

Join our channel google news Youtube