காபூல் விமான நிலையத்திலிருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டாரா?வீடியோ

காபூல் விமான நிலையத்திலிருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது போன்ற காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் இருந்து பெற்றோர் இல்லாமல் குழந்தை ஒன்று மேற்கத்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி குறித்து பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ்  தெரிவித்துள்ளதாவது, பெற்றோர் இல்லாமல் எந்த குழந்தையும் மீட்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த குழந்தையின் பெற்றோர் இதற்கு முன்னரே மீட்கப்பட்டுள்ளதால் இந்த குழந்தையை ராணுவத்தினரிடம் வழங்கியுள்ளனர்.  மேலும், பெற்றோர் இல்லாமல் … Read more

மீண்டும் தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்..!

பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  பிரிட்டன் நாட்டில் டெல்டா வகை  கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பிரிட்டன் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது, பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோருடன் தொடர்பில் … Read more

கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பே கோமாவில் இருந்த சிறுவன் – தற்பொழுது அவனது நிலை என்ன தெரியுமா?

கொரோனா தொற்று ஏற்பட்டுவதற்கு முன்பே விபத்து காரணமாக கோமாவில் இருந்த சிறுவனுக்கு இரண்டுமுறை கொரோனா தொற்று ஏற்படும் அவனுக்கு கொரோனா பற்றி எதுவுமே தெரியாத நிலையில் தற்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை சிறுவன் அடைந்து வருகிறானாம். கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் புரட்டி போட்ட கொரோனா வைரஸ் என்றாலே உலகம் முழுவதுமுள்ள சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொரோனா என்ற பெயருக்கே தற்பொழுது ஒரு தனி பலம் … Read more

கொரோனா தடுப்பு மருந்து சோதனை- வெற்றி அடைந்த ஆக்ஸ்போர்டு.. 10 கோடி தடுப்பூசிகள் ஆர்டர்!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் 150 நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அதில் ஒரு பங்காக, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்தனர். மேலும் அதற்க்கு 1077 தன்னாலர்வர்கள் … Read more

நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு ! பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையா மனு

நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில்   விஜய் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். பிரிட்டனில்  தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை  நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் இறுதி தீர்ப்பை  தேதி  … Read more

பிரிட்டன் பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி மருத்துவர் போராட்டம்

இங்கிலாந்து பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி மருத்துவர் போராட்டம் நடத்தினார். இங்கிலாந்தில் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் ,நர்ஸுகள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆனால் மருத்துவர்கள் அணிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு சாதனங்களுக்கு அங்கு கடும் கட்டுப்பாடு நிகழ்ந்து வருகிறது. இது கொரோனாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு கடும் கவலையாக அமைந்துள்ளது. இந்நிலையில் … Read more

ஒரே நாளில் பிரிட்டனில் 4,617 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,093ஆக உயர்வு

ஒரே நாளில் பிரிட்டனில் 4617 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் தொடங்கி தற்போது உலகில் பல நாடுகளில் பரவியுள்ளது.சீனாவை மட்டும் அல்லாது அமெரிக்கா,இத்தாலி,ஸ்பெயின்,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,617 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 861 பேர் உயிரிழந்துள்ளனர்.மொத்தமாக 13729 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,03,093ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே மிகவும் செங்குத்தான நிலையில் இருக்கும் சாலை இது தான் !

பிரிட்டன் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சாலை ஒன்று  உலகிலே மிக செங்குத்தான சாலை என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்க்கு முன்னர் நியுசிலாந்து நாட்டில் ட்யூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை தான் மிகவும் செங்குத்தான சாலை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தது. 35 சதவிகித அளவிற்கு செங்குத்தாக இருக்கும் அந்த சாலையை பின் தள்ளி தற்போது பிரிட்டன் நாட்டு சாலை முன்னுக்கு வந்துள்ளது. வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஹார்லெச் நகரத்தில் இருக்கும் அந்த … Read more