System தோல்வியடையவில்லை.., மோடி அரசு தோல்வியடைந்துள்ளது- சோனியா காந்தி..!

கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க “அனைத்து கட்சி கூட்டத்தை அவசரமாக அழைக்க வேண்டும்” என்று  பிரதமரை சோனியா காந்தி வலியுறுத்தினார். நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் மோடி அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது..?  நாம் தெளிவாக இருக்க வேண்டும் இந்தியா பல பலங்களையும், வளங்களையும் கொண்டிருப்பதால் System தோல்வியடையவில்லை என்று கூறினார். அந்த … Read more

ஊரடங்கு காலத்திலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வசதியை செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடி, கொரோனா நிலவரம் கொரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கொரோனா நிலவரம் கொரோனா தடுப்பூசி பணிகள் மற்றும் மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார். அவர் பேசுகையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் வீணாகும் தடுப்பூசியின்  … Read more

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய டெல்லி முதல்வர்…!

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய டெல்லி முதல்வர்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில், ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், நேற்று, டெல்லிக்கு 730 மெட்ரிக் … Read more

பிரதமருக்கு கடிதம் எழுதிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மாநிலத்தில் கொரோனாவின் நிலைமை தொடர்பான செயல் திட்டம் குறித்துப் பேசப் போவதாக அறிவித்திருந்தார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் இலவச நோய்த்தடுப்பு மற்றும் போதுமான தடுப்பூசி விநியோகத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். … Read more

அதிகாரிக்கு கொரோனா.., பொறுப்பை நிதின் கட்கரிக்கு மோடி ஒப்படைக்க வேண்டும்.., சுப்பிரமணியம் சுவாமி.!

கொரோனா தொற்றுநோய் தடுப்பு முயற்சிகளை நிர்வகிக்கும் பொறுப்பை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு வழங்க வேண்டும் என சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக நிலைமை கட்டுப்படுத்த முடியாததாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பத்திக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை உள்ளது. இதற்கிடையில்,  பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி கொரோனா பிரச்சினை குறித்து மோடி அரசுக்கு … Read more

வங்காளத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூலித் தொழிலாளியின் மனைவி!

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட சந்தனா பவுரி எனும் தின கூலி தொழிலாளியின் மனைவி அவர் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் தொகுதியில் சந்தனா பவுரி எனும் பெண் வேட்பாளர் சால்டோரா தொகுதியில் போட்டியிட்டார். இவர் … Read more

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் காணொளி காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் இன்று காணொளிக் காட்சி வழியாக முக்கியமான ஆலோசனை ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2004ஆம் … Read more

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் கவர்னர் காலமானார்…!

ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் கவர்னர் ஜக்மோகன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிறத்தல் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஜக்மோகன் ஜியின் மறைவு நம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு. அவர் ஒரு முன்மாதிரியான நிர்வாகி மற்றும் புகழ்பெற்ற அறிஞர். அவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக … Read more

கொரோனா தொற்றின் நிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

நாடு முழுவதிலும் உள்ள  கொரோனா தொற்றின் சூழ்நிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகிவற்றை குறித்து பரிசீலனை செய்வதற்காக பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். கொரோனா நோய்த் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று தொடர்பாக மனித வள நிலைமை மற்றும் அதை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை ஒன்பதரை மணியளவில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விட … Read more

மாநில அரசுகளை குறை கூறும் மோடி…! பேரழிவை தவிர்க்காவிட்டால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் – சீதாராம் யெச்சூரி

பிரதமர் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். … Read more