இந்தியன் 2வில் இனி இவர்களுக்கு பதில் இவர்கள்?! வித்யுத் ஜம்வால் மற்றும் ப்ரியா பவானிசங்கருக்கு வாய்ப்பு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன்2. இந்த படத்தின் போஸ்டர் அறிவிப்பு எல்லாம் வெளியாகி, பிறகு ஹீரோ கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக இறங்கியதால் படத்தின் ஷூட்டிங் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்தியன் 2 டிராப் என பல வதந்திகள் வெளியாகின. இருந்தும் படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போது வெளியான தகவலின் படி இந்தியன் 2வில் முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மற்றும் அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே … Read more

உலகநாயகனின் தலைவன் இருக்கிறான் படத்தின் மேலும் பல தகவல்கள்! மிரட்டும் வில்லன் கதாபாத்திரம்!

நேற்று முன்தினம் முதல் தமிழ் சினிமா செய்திகளில் முக்கிய பேசு பொருள் கமல்ஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறன் படம் தான். அதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என கூறியதும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகி விட்டது. இப்படம் 2015ஆம் ஆண்டு சபாஷ் நாய்டு ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே பேசப்பட்டது. இப்படத்தினை முதலில் ஹிந்தி – தமிழ் என இரு மொழிகளிலும் எடுக்க அப்போது திட்டமிட்டார் கமல். ஹிந்தியில் … Read more

உலகநாயகனுடன் இணைந்த இசைப்புயல்! பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்ப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 தயராகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அரசியலில் பிஸியானதால் படம் தொடங்க காலதாமதம் ஆனது. இதனிடையே கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து இயக்க இருந்த தலைவன் இருக்கிறான் படம் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இபபடத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் … Read more

அப்பத்தாவ ஆட்டைய போட்டாங்க! கமல்ஹாசன் அண்ணன் நடிக்கும் புதிய பட அப்டேட்ஸ்!

உலகநாயகன் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். சாருஹாசன் இதற்கு முன்னர் முன்னனி வேடத்தில் தாதா 87 எனும் படம் வெளியாகி இருந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு அப்பத்தாவ ஆட்டய போட்டாங்க எனும் வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது! இந்த படத்தினை ஸ்டீபன் ரங்கராஜ் என்பவர் இயக்க உள்ளார்.உடன் இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த … Read more

biggboss 3: தன்னிச்சையாக செயல்பட வேண்டும்! தைரியமாக செயல்பட வேண்டும்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல வித்தியாசமான, சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், கமலஹாசன் அவர்கள் பேசுகையில், தலைமை, தன்னிச்சையாக செயல்பட வேண்டும், தைரியமாக செயல்பட வேண்டும் என உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை பேசியுள்ளார். #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு … Read more

விக்ரமை இப்படி ஒரு ரோலில் நான் பார்த்தது இல்லை! படத்தில் அவர் போலிஸ்தானா?!

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பு திறமையை சினிமா உலகம் வியந்து ரசிக்கும். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்தவாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தை பற்றி படத்தின் எடிட்டர் கூறுகையில், ‘ படத்தில் அவர் போலீஸா என்பதை படத்தினை பார்த்து தெரிந்து … Read more

தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்காக மக்கள் நீதி மய்யதிற்கு அழைப்பு!

பொருளாதாரத்தில் பின்தங்கிய குறிப்பிட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு சார்பில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு தமிழகத்தின் பிரதான காட்சிகள் பலவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து முதன் முதலாக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு … Read more

biggboss 3: காதலில் சொதப்புவது எப்படி? டேய் சிங்கிள்ஸ் சாபம் உங்கள சும்மா விடாதுடா !

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம்பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், காதலில் சொதப்புவது எப்படி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கவின் பல பதில்களை கூறுகிறார். இதனை கேட்ட சிலர் அவரை கலாய்கின்றனர். இந்த விடியோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ, சிங்கிள்ஸ் சாபம் உன்ன … Read more

bigboss 3: இசையோடு இணைந்து கலக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில், நாளுக்கு நாள் அங்குள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகள் வைக்கப்டுகிற நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் இசையோடு இணைந்து கலக்கின்றனர். இதோ அந்த வீடியோ, இசை எங்கிருந்து வருது.. 😂 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VijayTV … Read more

கமலஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கினார் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி!

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசுகையில் இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவரது பெயர் நாதுராம் கோட்ஸே என என குறிப்பிட்டார். இதற்க்கு பாஜக, அதிமுக, இந்து முன்னணி அமைப்புகள் என பலரும் கண்டனங்களை பதிவு செய்ததோடு, வழக்குகளும் போடப்பட்டன. இதன் காரணமாக கமல்ஹாசன் உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு ஒன்றை அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். DINASUVADU