இந்தியன் 2வில் இனி இவர்களுக்கு பதில் இவர்கள்?! வித்யுத் ஜம்வால் மற்றும் ப்ரியா பவானிசங்கருக்கு வாய்ப்பு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன்2. இந்த படத்தின் போஸ்டர் அறிவிப்பு எல்லாம் வெளியாகி, பிறகு ஹீரோ கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக இறங்கியதால் படத்தின் ஷூட்டிங் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்தியன் 2 டிராப் என பல வதந்திகள் வெளியாகின. இருந்தும் படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

தற்போது வெளியான தகவலின் படி இந்தியன் 2வில் முக்கிய ரோலில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் மற்றும் அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதே போல காஜலும் முக்கிய ரோலில் நடிக்க இருந்தார்.

தற்போது படம் லேட்டாக ஆரம்பிக்கப்படுவதால் படத்தில் வித்யூத் ஜம்வால் முக்கிய ரோலில் நடிக்க  உள்ளதாகவும், பிரியா பவனிசங்கர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.