காஞ்சிபுரத்தில் வீட்டுமனை வரைபட அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்!2 பேர் கைது

வீட்டுமனை வரைபட அனுமதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில்  லஞ்சம் வாங்கிய, ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர், கேளம்பாக்கத்தில் புதிய மனைக்கான வரைபட ஒப்புதலுக்காக அணுகியபோது 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வேண்டும் என ஊராட்சி செயலர் குமாரசாமி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பிரபாகரன் புகார் அளித்தார். இந்நிலையில், பிரபாகரனிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொள்ளுமாறு புதுப்பாக்கம் ஊராட்சிச் செயலர் வடிவேலுவிடம் … Read more

மும்பையில் ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த ஒருவரின் செல்போன் வெடித்துச் சிதறியது!

ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த ஒருவரின் செல்போன் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி  மும்பையில்  வெளியாகி உள்ளது. பாண்டூப் பகுதியில் உள்ள அந்த உணவகத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் இளைஞர் ஒருவர் உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்துச் சிதறியது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்துக் கொண்டு ஓடினர். செல்போன் வைத்திருந்த நபர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

காலா வெளியாக கர்நாடக சகோதரர்கள் ஒத்துழைக்க வேண்டும்!ரஜினிகாந்த்

காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். காவிரி பிரச்சனையின் போது, தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. காலா படத்தை … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எஞ்சியுள்ள 6 பேரின் உடல்களுக்கு இன்று  உடற்கூறு ஆய்வு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் எஞ்சியுள்ள 6 பேரின் உடல்களுக்கு இன்று  உடற்கூறு ஆய்வு நடக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மே 27 ஆம் தேதி மீனவர்களின் நிபந்தனையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய … Read more

நீட் தற்கொலை:நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மேலும் ஒரு மாணவி தற்கொலை!தொடரும் உயிர் பலி

ஐதராபாத்தில் மாணவி ஒருவர்  நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத் அருகே உள்ள கச்சிக்கூடா என்னுமிடத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி வணிக வளாகம் ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்பதாவது தளத்தில் இருந்து குதித்த மாணவி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற விரக்தியால் … Read more

நேரம் பிந்தி வந்தேம்மா, தவறாக நினைக்காதீங்க!வருந்திய விஜய்

நேற்று நள்ளிரவில் நடிகர் விஜய் அறிவிக்காமலேயே தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நடிகர் விஜய் நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்லோனின் … Read more

காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை!காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்!நடிகர் ரஜினிகாந்த்

காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ திரைப்படம் வருகிற 7-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். காவிரி பிரச்சனையின் போது, தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், அவர் நடிப்பில் உருவாகும் படங்களை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பியது. காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து … Read more

விமானங்களைப் போல இனி ரயில்களிலும் அதிக சுமை கொண்டு செல்லும் பயணிகளுக்கு 6 மடங்கு அபராதம் ?

 இனி ரயில்களிலும் விமானங்களைப் போன்று  அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் சுமை கொண்டு சென்றால் 6 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிகள் அதிக சுமை ஏற்றிச் செல்வதாக வந்த புகார்களை அடுத்து, ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் அபராத நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி இரண்டாம் வகுப்பு பிரிவில் செல்லும் பயணி 35 கிலோ வரையிலும், படுக்கை வகுப்பு பிரிவில் செல்லும் பயணி 40 கிலோ வரையிலும் எந்த … Read more

இந்திய முழுவதும் இடைத்தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி!மீள்வது எப்படி?பாஜக ஆலோசனை

 பாஜக  பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்திலும் கூட்டணிக் கட்சிகளுடன் உறவை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. இதன் எதிரொலியாகவும், 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வர இருப்பதை முன்னிட்டும் கூட்டணியில் உள்ள கட்சிளுடன் உறவை மேலும் வலுப்படுத்த பாரதிய ஜனதா  முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவில் கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி பாஜகவை … Read more

சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்ட ஓட்டல்காரர் சுட்டுக் கொலை!

சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டதால்,மேற்கு வங்க மாநிலத்தில் ஓட்டல் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மாநிலத்தின் இருபத்து நான்கு பர்கானாஸ் மாவட்டத்தில்,  சஞ்சய் மண்டல் என்பவரின் ஓட்டலுக்கு முகமது பெரோஸ், ராஜா, மோக்ரி, சல்மான் என்ற உள்ளூர்வாசிகள் நான்கு பேர் சாப்பிட வந்தனர். நான்கு பேரும் ஆளுக்கு ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட்டு முடித்த நிலையில், ஒரு பிளேட் பிரியாணிக்கு 190 ரூபாய் வீதம், 760 ரூபாய் தருமாறு அவர்களிடம் சஞ்சய் மண்டல் கேட்டார். ஒரு பிளேட் … Read more