அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைப்பு …!

காவிரி விவகாரம் தொடர்பாக  அதிமுக எம்.பி.க்கள் தொடர் அமளியால் ஈடுட்டதால்  மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கபட்டுள்ளது. இதற்கு முன்  தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. புதுச்சேரி, காரைக்காலிலும் இதே போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், … Read more

தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு…!மத்திய அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு…!

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு அளித்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க கூடாது என தமிழக அரசு அளித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில்  உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் மனுக்களை வரும் 9ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்ற கடந்த பிப்ரவரி … Read more

சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் சாலைமறியல்….!

காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திமுக 3 ஆவது நாளாக மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் சென்னை  தியாகராய நகரில் எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தலைமையில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரங்கநாதன் சுரங்கப்பாதை, மதுராந்தகம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு போராட்டம் என்று திமுகவினர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை காப்பாற்றவே, அதிமுக உண்ணாவிரத போராட்டம்…!

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை காப்பாற்றவே, அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டுள்ளதாக   திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுக போராட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து  அ.தி.மு.க. உண்ணாவிரத  போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசை காப்பாற்றவே, அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டுள்ளதாக   திமுக … Read more

கொடைக்கானலில் காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கம் முழுகடை அடைப்பு …!

கொடைக்கானலில் காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி வணிகர் சங்கம் முழுகடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்,  வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கடை அடைப்பு போராட்டமும், விவசாய சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டமும் நடைபெறுகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளி வந்த வண்ணம் உள்ளன. விக்கிரம ராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு … Read more

மத்திய அரசை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரதத்தால், வரும் 9ம் தேதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும்…!

திண்டுக்கல்லில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் காவிரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. மத்திய அரசை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரதத்தால், வரும் 9ம் தேதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். இந்த போராட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்றுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே எ.வ. வேலு முன்னிலையில் சாலை மறியல் …!

காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் திமுக 3 ஆவது நாளாக மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் எ.வ. வேலு உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்  மடிப்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் மா. சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.    

உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம்…!டெல்லியை அழித்து விடாதீர்கள்…!

உச்சநீதிமன்றம் டெல்லியை அழித்து விடாதீர்கள் என்று மத்திய அரசுக்கு  கண்டனம் தெரிவித்துள்ளது . டெல்லியில் கட்டடங்களுக்கு சீல் வைக்கும் விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் உச்சநீதிமன்றம் அவதானித்துள்ளது.நீதிபதிகள் அதிகாரிகள் கடமையைச் செய்யத் தவறிவிட்டதால் மிகப்பெரிய பிரச்சினையாக இது விஸ்வரூபம் எடுத்திருப்பதாகவும்  கண்டித்துள்ளனர். பல்வேறு குடியிருப்புகள் மற்றும் அனுமதி பெறாத வணிக கட்டடங்களுக்கு  டெல்லியில் சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.டெல்லியில் கட்டடங்களுக்கு சீல் வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதால் சட்டம் ஒழுங்கு … Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசு ஐடிஐ மாணவர்கள் போராட்டம் …!

தூத்துக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்புகளை புறக்கணித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் … Read more

திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின்  மாநாடு நாளை துவக்கம் …!

திருச்சி பொன்மலை பகுதியில் மக்கள் நீதி மய்ய மாநாடு நாளை நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, சென்னை எழும்பூரில் இருந்து வைகை விரைவு ரயிலில் இன்று பிற்பகல் கமல்ஹாசன் பயணிக்கிறார். இந்த பயணத்தின் போது கமல்ஹாசன் ஆங்காங்கே மக்களை சந்திக்கவும்  திட்டமிட்டுள்ளார். அதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதையடுத்து ரெயில் நிலையங்களில் சந்திக்கும் திட்டத்தை கமல் ரத்து செய்தார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொண்டர்கள் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். … Read more