ஒரு வழியாக நிபந்தனை ஜாமீன் கிடைத்தது நடிகர் மன்சூர் அலிகானுக்கு!

நிபந்தனை ஜாமீன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் தேதி, பிரதமர் மோடி வருகைக்கு எதிராக கருப்புக் கொடி காண்பித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைதை கண்டித்து நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை … Read more

கர்நாடகா சட்டப்பேரவை கருத்துக்கணிப்பில் மண்ணை கவ்விய காங்.-பாஜக!அப்போம் யாருக்குத்தான் வெற்றி ?இதோ கருத்து கணிப்பு

கருக்கணிப்பு முடிவுகள்,கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கின்றன. 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதில் பா.ஜ.க.வும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவதில் காங்கிரசும் தீவிரமாக உள்ளன. அரியாசனம் யாருக்கு என மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் 91 இடங்களையும், பா.ஜ.க. 89 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் … Read more

சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் என்று  சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்ளை சம்பவம் முழு விபரம் : கொள்ளையன் மணீஷ்குமார் யாதவ் ஹீரோ ஹோண்டா பேஷன் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்து ஓடி விரைந்தான். பணப்பையை வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்திருந்த அவன், கையில் ஒரு துப்பாக்கி, கால்சட்டைப் பையில் ஒன்று என இரு நாட்டுத்துப்பாக்கிகளுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றான். … Read more

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் :தூத்துக்குடி பேராசிரியர்கள் ஜெனிபா, தமிழ்மலர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில்  தூத்துக்குடி பேராசிரியர்கள் ஜெனிபா, தமிழ்மலர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் … Read more

தொடர்ந்து அத்துமீறியதால் இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர் பலி!

பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய படைகள் கொடுத்த பதிலடியில்  கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் படைகள் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் மார்ச் 5ஆம் தேதி வரை, சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 351 முறை பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதேபோல நேற்றும், இன்று அதிகாலையும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கியதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி … Read more

கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை! சேலம் ஆட்சியர் எச்சரிக்கை

கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார் .மேலும்  மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும்  சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

விரைவில் குரங்கனி காட்டுத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் !

அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள்  குரங்கனி வனத்தீ தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, அங்கு ட்ரெக்கிங் சென்ற 22 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம், சூழல், குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்ய மிஸ்ராவை அரசு நியமித்தது. அவர் குரங்கனி சென்று வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்களிடமும், பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினார். விசாரணை விவரங்களை அறிக்கையாக தயார் செய்யும் பணி தற்போது நடைபெற்று … Read more

தூக்கிலிடுவதே மரணதண்டனையை நிறைவேற்ற பொருத்தமானது!மத்திய அரசு

மத்திய அரசு, மரணதண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதே பொருத்தமானது என்று  தெரிவித்துள்ளது. இதற்கு முன்  கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சிறார் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டம் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது சிறாரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபணமானால் தூக்கு தண்டனை விதிக்கப்படும்டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து … Read more

கமல்ஹாசன் மிகவும் ஆபத்தானவர்!அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் அவர் ஆபத்தானவர்!அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆணவத்தின் உச்சத்தில் இருப்பதாக  விமர்சித்துள்ளார். சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளின் திருநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.   இதை அடுத்து பெரம்பூரில் நடந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கமல்ஹாசனால், அவரை சுற்றி இருப்பவர்களுக்கு தான் ஆபத்து என்றார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களே இந்திய பின்தங்கியிருப்பதற்கு காரணம்!நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி வருத்தம்

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் (Amitabh Kant),இந்தியா பின்தங்கியிருப்பதற்கு உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வளர்ச்சியடையாததே காரணம் என தெரிவித்துள்ளார். டெல்லி Jamia Millia Islamia பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், தென் மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார். பீகார், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் சமூக ரீதியாக பின்தங்கியுள்ளதாகவும், வர்த்தக ரீதியாக இந்தியா முன்னேறினாலும், கல்வி, சுகாதாரத்தில் வளர வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், மனித … Read more