கோவையில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல்…!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி தொடர்ந்து நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் ரயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் தடுத்ததால் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து தண்டவாளத்தில் நின்ற படி காவிரி மேலாண்மை வாரியம் கோரி அவர்கள் முழக்கமிட்டனர். இதனால் திருவாரூர் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் அரை … Read more

ஆட்சியாளர்கள் காவிரி விவகாரத்தில் தூங்குவது போல் நடிக்கின்றனர்…!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில் ஆட்சியாளர்கள் தூங்குவதுபோல் நடிப்பதாக  குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி மீட்பு பயணத்தைத் தொடங்குவது குறித்து நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அரவிந்த் கேஜ்ரிவால் -சந்திரபாபு நாயுடு சிறப்பு சந்திப்பு …!சந்திப்பின் பின்னணி என்ன?

பாராளுமன்றத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய பா.ஜ.க, அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றுள்ள சந்திரபாபு நாயுடு, இன்று காலை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். தங்கள் கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கும்படி சந்திரபாபு, கெஜ்ரிவாலிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதே … Read more

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு!

திமுக சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அமைக்காததுடன், மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதனை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் வரும் … Read more

தூத்துக்குடி அருகே தீ விபத்தில் சிக்கிய சிறுவன் பரிதாபமகா உயிரிழப்பு!

சிகிச்சை பலனின்றி கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சிறுவன்  பரிதாபமாக உயிரிழந்தான். தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் சாலையை சேர்ந்தவர் லாரன்ஸ் ராஜதுரை. ஆவல்நத்தம் பகுதியில் இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. ஆலையின் முன்பகுதியில் தீப்பெட்டி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த கழிவுகளில் திடீரென தீப்பற்றியுள்ளது. அதன் அருகே அதே ஊரைச் சேர்ந்த சிறுவன் பத்ரகாளி முத்து விளைக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் மீது தீ பற்றியுள்ளது. அப்போது அருகில் இருந்தவர்கள் சிறுவனை … Read more

காவிரி பிரச்சனைக்கு முக்கிய காரணமே திமுகதான்…!முதல்வர் சாடல் …!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி பிரச்சனைக்கு காரணமே திமுகதான் என்றும், கபட நாடகத்தின் கதாநாயகனாக திமுக திகழ்வதாக,  குற்றம் சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். மாலையில்  உண்ணாவிரத பந்தலில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி பிரச்சனைக்கு … Read more

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்…!

காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உண்ணாவிரதம் போராட்டம்.  சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜெ.அன்பழகன் மற்றும் திமுகவினர் உண்ணாவிரதம் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று  காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனம்…!சென்னை ஐ.ஐ.டி.க்கு எத்தனையாவது இடம் ?

தமிழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் பட்டியலின் முதல் 10 இடங்களில்  இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப்பட்டியலை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், National Institutional Ranking Framework (NIRF) India Rankings 2018 என்ற பெயரில் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், ரேங்கிங் பட்டியலை வெளியிட்டார். 2018ம் ஆண்டின், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகள் … Read more

டிடிவி தினகரன் திடீர் அறிவிப்பு …!ஏப்ரல் 7 முதல் 27 வரை தொடர் போராட்டம்….!

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 7 முதல் 27 வரை தொடர் போராட்டம் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் தொடர்போராட்டம் நடைபெறும் என்று அமமுக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்”…!

சுப்ரீம் கோர்ட்டில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் காசிநாத் மகாஜன் என்ற ஓய்வு பெற்ற அதிகாரி, தன் மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட நடவடிக்கைக்கு எதிராக  மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு, கடந்த 20-ந்தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. “வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ், ஒரு அரசு ஊழியர் மீது கொடுக்கப்படும் புகாரின் அடிப்படையில், அவரை உடனடியாக கைது செய்துவிடக் கூடாது, டி.எஸ்.பி. தலைமையில் பூர்வாங்க … Read more