பணபட்டுவாடா செய்த அதிமுகவினரை பொதுமக்கள் உதவியுடன் சிறைபிடித்த திமுகவினர்!

வேலூரில் ரத்ததான மக்களவை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மதியம் 3 மணி வரை 52 சதவீத வாக்குப்பதிவுகளுடன் விறுவிறுப்ப்பாக தேர்தல் நடந்து வருகிறது. பணபட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினருடன் இணைந்து கட்சிகார்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் அதிமுகவை சேர்ந்த வாணியம்பாடி எம்எல்ஏவும், அதிமுக அமைச்சராக உள்ள நிலோபர் கபிலின் உதவியாளரின் வாகனத்தில் வந்த இருவர் வாக்காளர்களிடம் பணப்பட்டுவாடா செய்ய முற்பட்டனர். அப்போது அதனை கண்ட திமுகவினர் … Read more

வெளியூர் பத்திரிக்கையாளர்கள் காஷ்மீருக்குள் வர வேண்டாம்! உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்!

காஷ்மீரில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமர்நாத் யாத்திரைக்கு சென்றவர்கள் திரும்ப வர வைக்கப்பட்டனர்.  அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை  தற்போது மத்திய அரசு  நீக்கியுள்ளது. இம்மாதிரியான பதற்றமான சூழலில் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் மட்டும் காஷ்மீரில் இருங்கள். வெளியூர் பத்திரிக்கையாளார்கள் காஷ்மீருக்குள் வர வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து! இதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?!

காஷ்மீர் மாநிலமானது 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்ற முயற்சித்ததால் இந்திய ராணுவ துணையோடு அதனை முறியடித்தது. இதற்காக காஷ்மீர் மன்னர் சில ஒப்பந்தங்களுடன்  ஜம்மு காஸ்மீரை இந்தியாவுடன் இணைத்து கொண்டார். அதன் படி, காஷ்மீர் பாதுகாப்பு, காஷ்மீர் வெளிநாட்டு விவகாரம், தகவல் தொடர்பு ஆகியவற்றில் மட்டுமே இந்திய அரசாங்கம் தலையிட முடியும். மேலும், இந்திய அரசியல் சட்டம் 370இன் படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காஷ்மீர் மாநிலமானது … Read more

காஷ்மீரில் பதற்றம்! முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!

காஷ்மீரில் தற்போது உச்சகட்ட பதற்ற நிலை உருவாகியுள்ளது. பாதுகாப்பு வீரர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். மக்களவையில் அமைச்சரவை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காஷ்மீரில் முன்னாள் முதலமைசார்கள், முப்தி, உமர் அப்துல்லா மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் பெயரில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுளளது என கூறப்பட்டு வருகிறது.

காஷ்மீர் விவகாரம்: உச்சநீதிமன்றம் நீதிபதி அமர்வு திடீர் விடுப்பு!

காஷீமீரில்  தற்போது உச்சகட்ட பதட்ட நிலை உருவாகியுள்ள்ளது. அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் சுடப்பட்டுள்ளனர். முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முக்கிய நேரத்தில் திடீரென உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய அமர்வு விடுப்பு எடுத்துள்ளது. இந்த முக்கிய நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டதால் என்ன காரணம் என மக்கள் யோசித்து வருகின்றனர்.

மதுரையில் விவசாயி அடித்து கொலை! மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  விவசாயம் செய்து வருகிறார் பால்சாமி. இவருக்கு பாப்பம்மாள் என்கிற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளார்கள். இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து செய்து வந்துள்ளார்.  மற்ற நேரங்களில் தன் வீடு ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி போவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆடு மேய்த்து வீட்டு இரவு ஆடுகளுக்கு காவலாய் ஆட்டு பட்டியில் படுத்து உறங்கியுள்ளார். இன்று காலை அவர், தலையில் பலமாக அடிபட்டு இறந்து … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடியின் தம்பி!

இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரதமர் நரேந்திரமோடியின் தம்பியான பங்கஜ் மோடி வந்து தரிசனம் செய்தார். இவருடன்  அதிமுக தலைவரும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடன் வந்திருந்தார். இவர் இதற்க்கு முன்னர் மக்களவை தேர்தல் நடைபெறும் போது ராமேஸ்வரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்திருந்தார்.

பிளாஸ்டிக் பயன்படுத்தியதால் மேயருக்கு 500 அபராதம்! தீயாய் பரவும் அபராத ரசீது!

நாடு முழுவதும் பிளாஷ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 2016ஆம் ஆண்டே பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யபட்டுள்ளது. இங்கு முதல் தடவை பிளாஸ்டிக் உபயோகப்படுத்தி மாட்டிக்கொண்டால் 500 ருபாய் அபராதமும் , மீண்டும் தொடர்ந்தால் 1000 ரூபாய் அபராதமாக உயர்த்தப்படும். இந்நிலையில் அண்மையில் கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பெங்களூரு மேயர் கங்காம்பிகே மலர்க்கொத்து கொடுத்தார். அந்த பூங்கொத்து சுற்றி, பிளாஸ்டிக் சுற்றப்பட்டிருந்தது. இதனால்,  மேயருக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரசீது … Read more

வேலூரில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து சிசிடிவி கேமிரா, மடிக்கணினிகள் திருட்டு! மர்ம நபர்கள் கைவரிசை!

வேலூரில் நாளை மக்களவை தேர்த நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என மொத்தம் 28 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். டிடிவி தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள்  நீதி மய்யம் கட்சிகள் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. தேர்தல் நடைபெறுவதால் வேலூர் முழுவதும் போலீஸ் பறக்கும் படையினர் தீவீர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நேரத்தில் தான் குடியாத்தம் அரசு தொடக்க பள்ளியில் உள்ள வாக்கு … Read more

கோவில் தேரில் ஏறி தீபாராதனை காட்ட முயன்றபோது குருக்கள் தவறி விழுந்து பலி!

திருவாரூரில் உள்ள, தியாகராஜ சுவாமி கோவிலில் நேற்றுஆடிப்பூரவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கோவில் குருக்கள் முரளி அவர்கள், தேர் புறப்படுகையில் தீபாரதணை காட்டினார். பிறகு நடுஇரவில், தேரடிக்கு தேர் வந்தது. அப்போது தேரின் மேலே ஏறி அம்மனுக்கு தீபாராதனை கட்ட முற்பட்டார். அப்போது தேர் நகர்ந்ததால் முரளி குருக்கள் கீழே விழுந்தார். பிரதான சாலையில் விழுந்ததால் அதிகமாக அடிபட்டு ரத்தம் நிறைய வெளியேறியது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் … Read more