பணபட்டுவாடா செய்த அதிமுகவினரை பொதுமக்கள் உதவியுடன் சிறைபிடித்த திமுகவினர்!

வேலூரில் ரத்ததான மக்களவை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மதியம் 3 மணி வரை 52 சதவீத வாக்குப்பதிவுகளுடன் விறுவிறுப்ப்பாக தேர்தல் நடந்து வருகிறது.

பணபட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினருடன் இணைந்து கட்சிகார்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் அதிமுகவை சேர்ந்த வாணியம்பாடி எம்எல்ஏவும், அதிமுக அமைச்சராக உள்ள நிலோபர் கபிலின் உதவியாளரின் வாகனத்தில் வந்த இருவர் வாக்காளர்களிடம் பணப்பட்டுவாடா செய்ய முற்பட்டனர்.

அப்போது அதனை கண்ட திமுகவினர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.