பிளாஸ்டிக் பயன்படுத்தியதால் மேயருக்கு 500 அபராதம்! தீயாய் பரவும் அபராத ரசீது!

நாடு முழுவதும் பிளாஷ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 2016ஆம் ஆண்டே பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யபட்டுள்ளது. இங்கு முதல் தடவை பிளாஸ்டிக் உபயோகப்படுத்தி மாட்டிக்கொண்டால் 500 ருபாய் அபராதமும் , மீண்டும் தொடர்ந்தால் 1000 ரூபாய் அபராதமாக உயர்த்தப்படும்.

இந்நிலையில் அண்மையில் கர்நாடக முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பெங்களூரு மேயர் கங்காம்பிகே மலர்க்கொத்து கொடுத்தார். அந்த பூங்கொத்து சுற்றி, பிளாஸ்டிக் சுற்றப்பட்டிருந்தது. இதனால்,  மேயருக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரசீது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.