சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் நிரம்பியதால்-ஊர் மக்கள் மகிழ்ச்சி!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் கடந்த ஆண்டு அதிகளவில் வறண்டு போயின.இதனால் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு வந்து சென்னை மக்களுக்கு தமிழக அரசு குடிநீர் வினியோகம் செய்தது. இதன் காரணமாக கல்குவாரியில் நீர் குறைந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பின. இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரி … Read more

கர்நாடக மாநிலம் மங்கலூருவில் வெளுத்து வாங்கிய கன மழை!

தென்மேற்கு பருவமழை தொடங்கிய 48 மணி நேரத்திலேயே கர்நாடக மாநிலம் மங்களூர் நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடந்த திங்கட்கிழமை அன்று இந்த நகரை முற்றுகையிட்ட தென் மேற்கு பருவ மழை நேரம் செல்ல செல்ல தன் வீரியத்தை காட்டியது. செவ்வாய்கிழமை மாலை வரை விடாமல் தொடர்ந்து பெய்த மழையால் மங்களூரு வீதிகளில் எல்லாம் மழை நீர் ஆறுகளாக ஓடின. மங்களுருக்கு சாலையில், ரயில் போக்குவரத்து முடங்கிய நிலையில், மூன்று விமானங்களும் வேறு ஊர்களுக்கு திருப்பி விடப்பட்டன. மாநில … Read more

வட மாநிலங்களை கடும் கோடை வெயில்!

கோடையின் உச்சக்கட்ட வெப்பம்  வட மாநிலங்களில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தகித்துக் கொண்டிருக்கிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற பல இடங்களில் வெப்ப நிலை நேற்று 40 டிகிரி செல்சியசைக் கடந்தது. வாரணாசியில் வெப்பத்தைத் தணிக்க பலர் கங்கையில் நீராடி குளிர்ச்சியை நாடுகின்றனர். அங்கு 43 டிகிரி செல்சியசுக்கு வெப்பம் காணப்பட்டது. இதே போன்று மொரதாபாத்தில் ஐஸ்கிரீம்களையும் லெமன் சர்பத்களையும் குடித்து மக்கள் வெயிலின் சூட்டைத் தணிக்க முயன்றனர். மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பல்வேறு இடங்களில் தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழை!

 மிதமானது முதல் கனமானது வரையில்,  தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில்,மழைப் பெய்துள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், நேற்றிரவு கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. இதேபோன்று, சத்தியமங்கலத்தில், கனமழை கொட்டித்தீர்த்தது.. கோயம்புத்தூரில், நேற்றிரவு பெய்த பரவலான கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை முதல் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இரவு மாநகரின் பல இடங்களிலும் பலத்த சூறாவளி காற்று வீசியது .அதனால் பல இடங்களிலும் மின்வெட்டு ஏற்பட்ட சூழலில் திடீரென மழை பெய்தது ரயில்நிலையம், … Read more

கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கத்திரி வெயிலுக்கு இடையே பரவலாக மழை!

கன்னியாகுமரி, தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்,கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில் பரவலாக மழை பெய்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், திங்கள்சந்தை, இரணியல், குலசேகரம்,என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்தது. இதேபோல தேனி மாவட்டம் போடியில் நேற்று இரவு கனமழை பெய்தது. பெரியகுளத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மா மரங்களில் உள்ள மாங்காய்கள் உதிர்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதேபோல் கிருஷ்ணகிரி … Read more

தென்மேற்கு பருவமழை வரும் 29-ம் தேதி தொடக்கம்!இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வரும் 29-ம் தேதி  தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் தவிர்த்து ஏனைய இந்திய மாநிலங்கள் முழுவதும் தென்மேற்கு பருவமழையால் மழை பெறுகின்றன. தமிழகத்துக்கு மிகக்குறைவான அளவே மழை கிடைக்க வாய்ப்புள்ளது. வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலமாக கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டு 3 நாட்கள் முன்னதாக மே 29-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. … Read more

தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை!

பல்வேறு பகுதிகளில் தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுக்கும் வேளையில் சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றியுள்ள கரட்டடிபாளையம் கொளப்பளுர், நல்லகவுண்டன்பாளையம், டி.என் பாளையம் உள்ளிட்ட பகுதியில் சூறாவளிக் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றின் வேகத்தில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.   சத்தியமங்கலத்தில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசியபடி பலத்த இடி மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. சத்தியமங்கலம் – மேட்டுப்பாளையம் சாலையில் … Read more

BREAKING NEWS:தமிழகம், கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு கடும் எச்சரிக்கை!பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு!இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம்,ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் புயல் உருவாகியுள்ளதை அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்பட 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், அதற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் ஏமன் நாட்டின் துறைமுக நகரான ஏடனின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் இருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், சுகுத்தரா தீவின் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் சுமார் 560 … Read more

அந்தமான், கேரள பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!வானிலை ஆய்வு மையம் ஆய்வு மையம் எச்சரிக்கை!

தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல்சீற்றம் நிலவி வருவதால், அலைகள் 2மீ வரை இருக்கும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல்  அந்தமான், கேரள பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அமெரிக்கா பாரீஸ் பருவநிலை உடன்படிக்கைக்கு நிதி வழங்க மறுப்பு!தாமாக முன் வந்து நிதி வழங்கிய மைக்கேல் புளூம்பெர்க் !

நியூயார்க் முன்னாள் மேயரும் பெரும் பணக்காரருமான மைக்கேல் புளூம்பெர்க் ,பாரீஸ் பருவநிலை உடன்படிக்கைக்கான நிதித் தேவைகளுக்காக 29கோடியே எண்பது லட்சம் ரூபாய்க்குக் காசோலை கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். புவி வெப்பமாதலைத் தடுக்க 194நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பாரீஸ் பருவநிலை உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளனர். இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா மீண்டும் சேராவிட்டால் அமெரிக்காவின் நிதிப் பங்களிப்பைத் தன்னுடைய அறக்கட்டளையே வழங்கும் என்றும் மைக்கேல் புளூம்பெர்க் உறுதியளித்தார். அதன்படி 45லட்சம் டாலர் தொகைக்குப் பாரீஸ் பருவநிலை உடன்படிக்கைக்குக் காசோலை வழங்கப் போவதாகத் … Read more