அமெரிக்கா பாரீஸ் பருவநிலை உடன்படிக்கைக்கு நிதி வழங்க மறுப்பு!தாமாக முன் வந்து நிதி வழங்கிய மைக்கேல் புளூம்பெர்க் !

நியூயார்க் முன்னாள் மேயரும் பெரும் பணக்காரருமான மைக்கேல் புளூம்பெர்க் ,பாரீஸ் பருவநிலை உடன்படிக்கைக்கான நிதித் தேவைகளுக்காக 29கோடியே எண்பது லட்சம் ரூபாய்க்குக் காசோலை கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். புவி வெப்பமாதலைத் தடுக்க 194நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பாரீஸ் பருவநிலை உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த உடன்படிக்கையில் அமெரிக்கா மீண்டும் சேராவிட்டால் அமெரிக்காவின் நிதிப் பங்களிப்பைத் தன்னுடைய அறக்கட்டளையே வழங்கும் என்றும் மைக்கேல் புளூம்பெர்க் உறுதியளித்தார். அதன்படி 45லட்சம் டாலர் தொகைக்குப் பாரீஸ் பருவநிலை உடன்படிக்கைக்குக் காசோலை வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் 29கோடியே எண்பது லட்சம் ரூபாயாகும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment