இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாது – வைகோ பேச்சு!

தேசத்துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது . தீர்ப்பில், ஒரு வருடம் சிறை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. உடனடியாக, ஜாமின் வழங்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இத  விசாரித்த நீதிமன்றம் ஜாமின் வழங்கியது மேலும் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த … Read more

வைகோவை குற்றவாளியாக அறிவித்தது நீதிமன்றம் ! ஒரு வருடம் சிறை தண்டனை

வைகோ குற்றவாளி என்று அறிவித்து எம்.பி மற்றும் எம்,எல்,ஏ மீதான வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் தீர்ப்பு இன்று வெளியானது. 2009 ம் ஆண்டு சென்னையில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் , இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி சாந்தி முன்னிலையில் வந்தது. வழக்கின் தீர்ப்பில்,  வைகோ குற்றவாளியாக … Read more

 தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது-வைகோ

சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் திட்டத்தில் தமிழ் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட மத்திய சட்டத்துறை அமைச்சரும் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன்-வைகோ

திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுவார் என உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் வைகோ. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் வைகோ.அப்பொழுது அவர் கூறுகையில்,மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது பற்றி சிந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தல் : 6-ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் மற்றும் வைகோ வேட்பு மனுத்தாக்கல்

ஜூலை 18-ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.இதனால் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்  திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வழக்கறிஞர் வில்சன் ,தொ.மு.ச சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இந்த நிலையில்  மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் சண்முகம், வில்சன் வருகின்ற  6-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர் … Read more

#BREAKING : மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டி

மாநிலங்களவை தேர்தலில்  மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கியமான கட்சி மதிமுக ஆகும்.மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இந்த … Read more

வைகோ மீதான தேசத்துரோக வழக்கு – ஜூலை 5 ல் இறுதி தீர்ப்பு !

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் இறுதி தீர்ப்பானது வரும் ஜுலை 5 ம் தேதி வெளியாகும்  என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2009 ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2009 ம் ஆண்டின் எம்பி மற்றும் எம்ஏ மீதான குற்றவழக்குகளை … Read more

எகிறும் தண்ணீர் விலை !சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது-வைகோ

தண்ணீரின் விலையை  தனியார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதை சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,குடிநீர், பிற உபயோகத்திற்கான தண்ணீரின் விலையை, தனியார் நிறுவனங்கள் எந்த கட்டுப்பாடுமின்றி உயர்த்தியுள்ளதை சென்னை மாநகராட்சி வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் 3 மாணவிகள் இறந்ததால் தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது-வைகோ

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில்  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம்.நீட் தேர்வால் 3 மாணவிகள் இறந்ததால் தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது .கோதாவரியில் இருந்து காவிரிக்கு தண்ணீர் வரும் என்பதெல்லம் கானல் நீராக போய்விடும்.ஹைட்ரோகார்பனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும் தமிழகத்தில் 274 மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மதிமுக … Read more

பாரதியார் தலைப்பாகையில் நிறம் மாறியது ஏன்? தலைவர்கள் கேள்வி!

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது. இவர்களுக்கான புதிய பாட நூல்களை நேற்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். அதில், பொதுத்தமிழ் பாடநூலில் முகப்பு அட்டையில் மகாகவி பாரதியார் அவர்களது புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதுவரை முண்டாசு வேந்தன் பாரதி வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்த நிலையில் புதிய பாடநூலில் காவி நிறத்தில் உள்ளது.இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், … Read more