27 வயது அமெரிக்க பெண் டெல்லியில் கடத்தல்.? பெற்றோரிடம் பணம் பறிக்க நடந்த சதி அம்பலம்…

டெல்லியில் தங்கியுள்ள 27 வயது அமெரிக்க பெண் தான் கடத்தப்பட்டதாக தனது பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்க முயன்றுள்ளார்.  டெல்லியில் 27 வயது அமெரிக்க பெண் ஒருவர் தனது ஆண் காதலருடன் தங்கி வந்துள்ளார். சுற்றுலா விசாவில் வந்த இவர் இங்கு தங்கி இருக்கையில் செலவு செய்ய பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. உடனே யோசித்த அந்த பெண், தன்னை யாரோ கடத்திவிட்டார்கள், என்னை ஓர் இடத்தில் அடைத்து வைத்து இருக்கிறார்கள். என்னை துன்புறுத்துகிறார்கள் என தனது பெற்றோர்களுக்கு … Read more

மொன்டானாவில் நெடுஞ்சாலையில் புயல் காரணமாக ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து..! 5 பேர் உயிரிழப்பு..!

மொன்டானாவில் உள்ள இன்டர்ஸ்டேட் 90 இல் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.  மொன்டானாவில் உள்ள இன்டர்ஸ்டேட் 90 இல் வெள்ளிக்கிழமை மாலை 4:30  மணியளவில் புழுதி  புயல் காரணமாக மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர்  உயிரிழந்துள்ளனர். இந்த குறித்து, மொன்டானா நெடுஞ்சாலை ரோந்து சார்ஜென்ட் கூறுகையில், மொன்டானாவில் உள்ள இன்டர்ஸ்டேட் 90 இல் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட விபத்தில், குறைந்தது 20 வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த … Read more

நாங்கள் ஒரு போதும் அப்படி செய்ய மாட்டோம்… அமெரிக்காவிடம் பணிந்த டிக்டாக்…

அமெரிக்கர்களின் தரவுகளை டிக் டாக் நிறுவனம் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு டிக் டாக் மறுப்பு தெரிவித்துள்ள்ளது.  சீனாவை பூர்விகமாக கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செயலி என்றால் அது டிக் டாக் செயலி தான். ஆனால், இந்த செயலி பயனர்களின் தரவுகளை லீக் செய்கிறது என்ற குற்றச்சாட்டால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அந்நாட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் அமெரிக்க அரசு சார்பாக ஓர் குற்றசாட்டு டிக் டாக் … Read more

#Shocking:சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி;20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு;6 பேர் உயிரிழப்பு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம். அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினவிழா அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,அதன் ஒரு பகுதியாக சிகாகோவின் ஹைலேண்ட் பார்க் பகுதியில் நேற்று(ஜூலை 4) நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகு பலர் சுடப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் இறந்துவிட்டதாகவும்,மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில்,அவர்கள் … Read more

அமெரிக்காவில் உள்ள 7,37,000 வாகனங்களை திரும்ப பெறும் ஃபோர்டு ..!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மூலம் 2020-2022 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட Ford Escape மற்றும் 2021-2022 கண்டறியப்பட்ட Ford Bronco Sport ஆகிய வாகனங்களை திரும்ப பெற போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதில்,  1.5 லிட்டர் எஞ்சின்களை கொண்ட 345,451 வாகனங்களை திரும்ப பெற போவதாகவும், இந்த வாகனங்களின் எஞ்சின் பகுதியில் விரிசல் மற்றும் தீயை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் கசிவு உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. … Read more

இன்று பூமியை நோக்கி வரும் புர்ஜ் கலிஃபாவை விட இரண்டு மடங்கு பெரிய கோள்!

அமெரிக்கா:புர்ஜ் கலிஃபாவின் அளவை விட பெரிய அளவிலான சிறுகோள் ஒன்று இன்று மாலை பூமியை நோக்கி வரும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவின்(மிகப்பெரிய கட்டிடம்) அளவை விட பெரிய அளவிலான சிறுகோள்(asteroids) ஒன்று இன்று (ஜனவரி 18) பூமியை நோக்கி வந்து 1,230,000 மைல் தொலைவில் பறக்க உள்ளதாகவும்,1994 PC1 என அழைக்கப்படும் 7482 என்ற சிறுகோள் சுமார் 1.6 கிமீ அகலம் கொண்டது மற்றும் அபாயகரமானது என்றும் … Read more

எதிரிகளை வேட்டையாடும் பிரிடேட்டர் ட்ரோன் – அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா!

அமெரிக்காவுடன் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரிடேட்டர் ட்ரோன் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து 3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,000 கோடி) மதிப்பீட்டில் 30 மல்டி-மிஷன் ஆயுதம் கொண்ட பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்குவதற்கான நீண்டகால யோசனையை இந்தியா தற்போது உறுதி செய்ய உள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் சீனா என இரு எல்லை தொடர்பான போர் வந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் இந்தியா எல்லையில் … Read more

அமெரிக்கா கவலை : பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது …!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர்  தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், நாங்கள் பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறோம். மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தற்பொழுது பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அதனால் எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் வெளிப்படையாக பேசி தீர்க்க விரும்புகிறோம். மேலும் எல்லையில் … Read more

அமெரிக்க கடற்படையில் சீக்கிய அதிகாரி டர்பன் அணிய அனுமதி..!

அமெரிக்க கடற்படையில் சீக்கிய அதிகாரி டர்பன் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க கடற்படையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய அதிகாரியான சுக்பீர் டூர் கடந்த 2017 ஆம் ஆண்டு சேர்ந்தார். தற்போது இந்த சீக்கிய அதிகாரிக்கு டர்பன் அணிய அமெரிக்க கடற்படை அனுமதி அளித்துள்ளது. இவர் அவரது மத வழக்கப்படி, டர்பன் அணிந்து பணியாற்ற விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க கடற்படை, போர் முனையில் சீருடை வேறுபாடு மற்றும் கடற்படை வீரர்களின் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை இது பாதித்து … Read more

அமெரிக்காவில் தடம் புரண்ட ரயில் – 3 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவிலுள்ள மொன்டானா மாகாணத்தில் ரயில் தடம் புரண்டதில், மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள மொன்டானா எனும் மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்த நிலையில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 147 பயணிகளும் ரயிலை இயக்கிய குழுவை சேர்ந்த 13 பேரும் அந்த ரயிலில் பயணம் செய்ததாகவும், … Read more