கொடைக்கானல் – வாகனங்களுக்கு தடை

கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை. கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை யொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள், பொதுமக்கள் செல்லலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள 7,37,000 வாகனங்களை திரும்ப பெறும் ஃபோர்டு ..!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் பல ஆண்டு காலமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மூலம் 2020-2022 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்ட Ford Escape மற்றும் 2021-2022 கண்டறியப்பட்ட Ford Bronco Sport ஆகிய வாகனங்களை திரும்ப பெற போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதில்,  1.5 லிட்டர் எஞ்சின்களை கொண்ட 345,451 வாகனங்களை திரும்ப பெற போவதாகவும், இந்த வாகனங்களின் எஞ்சின் பகுதியில் விரிசல் மற்றும் தீயை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய் கசிவு உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…ஆர்டிஓக்களுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு!

சென்னை:ஆவணங்களை புதுப்பிக்காத வாகனங்கள் மீது ஆர்டிஓக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சரக ஆர்டிஓக்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தகுதிச் சான்று, காப்புரிமைச் சான்று, புகைச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கும் வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக,தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு … Read more

Breaking:வாகனங்களில் இந்த படங்களை 60 நாட்களுக்குள் நீக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!

வாகனங்களில் தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி,தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசியல் சார்ந்த படங்களை 60 நாட்களில் நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும்,வாகனங்களில் கட்சி கொடிகள்,கட்சி தலைவர்களின் படங்களை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும்,தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்றும் உயர்நீதிமன்ற … Read more

புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) என தொடங்கும் பதிவெண்ணை அறிமுகம் செய்த மத்திய அரசு…!

புதிய வாகனப் பதிவில் BH (Bharat series) என தொடங்கும் பதிவெண்ணை அறிமுகம் செய்த மத்திய அரசு. மத்திய அரசு புதிய வாகன பதிவில் BH என தொடங்கும் பதிவைண்ணை  அறிமுகம் செய்துள்ளது. ஒரு வாகனத்தை புதிதாக வாங்கும்போது அந்த வாகனத்தின் பதிவு எண் (தமிழ்நாடு – TN) என்று பதிவு செய்யப்படும். இந்த பதிவு கொண்ட வாகனங்களை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும்போது அந்த மாநிலங்களில் வாகன பதிவு எண்ணை மாற்ற வேண்டும். இப்படி மாநிலம் … Read more

கோவையில் ரிமோட் மூலம் சிக்னலை கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகம்…!

கோவையில் ரிமோட் மூலம் சிக்னலை கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகம். பொதுவாக சாலையில் வாகன ஓட்டிகள் சீராக செல்வதற்கு சிக்னல் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல், இந்த சிக்னலுக்கு அருகே நின்று போக்குவரத்து காவல் அதிகாரிகளும் வாகன ஓட்டிகளை நெறிப்படுத்துவதுண்டு. அந்த வகையில், கோவையில், சோதனை முயற்சியாக போக்குவரத்து காவல்துறையினர் ரிமோட் மூலம், சிக்னலை இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மருதமலை சாலை மற்றும் திருச்சி சாலை என 52 இடங்களில் சிக்கனல்கள் உள்ளன. இதனையடுத்து, … Read more

வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீட்டை கட்டாயமாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

செப்டம்பர் 1 முதல் புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுக்கு காப்பீட்டை கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. காப்பீடு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு போக்குவரத்துறை கூடுதல் தலைமை … Read more

“‘G’ அல்லது ‘அ’ எழுத்து போட்ட வாகனங்களை சோதனை நடத்துங்கள்”- போலீஸாருக்கு உத்தரவு…!

‘G’ அல்லது ‘அ’ எழுத்து போட்ட வாகனங்களை சோதிக்க போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து சோதனைச்சாவடிகளில் உள்ள போலீஸாருக்கு ஒரு அதிரடி  உத்தரவிடப்பட்டுள்ளது.அதாவது,’G’ அல்லது ‘அ’ எழுத்து மற்றும் ‘Human Rights’ என்று எழுதியுள்ள தனியார் வாகனங்களில் போலீசார் சோதனை நடத்த வேண்டும் என்பதுதான். ஏனெனில்,ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல ‘G’ அல்லது ‘அ’ எழுத்து கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.மேலும்,சிலர் Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer … Read more