நாங்கள் ஒரு போதும் அப்படி செய்ய மாட்டோம்… அமெரிக்காவிடம் பணிந்த டிக்டாக்…

அமெரிக்கர்களின் தரவுகளை டிக் டாக் நிறுவனம் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு டிக் டாக் மறுப்பு தெரிவித்துள்ள்ளது. 

சீனாவை பூர்விகமாக கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செயலி என்றால் அது டிக் டாக் செயலி தான். ஆனால், இந்த செயலி பயனர்களின் தரவுகளை லீக் செய்கிறது என்ற குற்றச்சாட்டால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அந்நாட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்மையில் அமெரிக்க அரசு சார்பாக ஓர் குற்றசாட்டு டிக் டாக் மீது எழுந்தது.

டிக் டாக், அமெரிக்க பயனர்களின் தரவுகளை வெளியில் லீக் செய்கிறது  என்றும். சீனாவில் இருக்கும் டிக் டாக் பொறியாளர்களுடன் அமெரிக்க டிக் டாக் நிறுவனம் தொடர்பில் இருப்பதும் குற்றசாட்டாக எழுந்தது. இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள டிக் டாக் நிறுவனம் இதற்கு பதில் அளித்தது.

அதாவது, நாங்கள் அமெரிக்க பயணிகர்களின் தரவுகளை யாருக்கும் கொடுக்க மாட்டோம். சீனாவில் உள்ள பொறியாளர்களே கேட்டாலும் நாங்கள் அதனை செய்ய மாட்டோம் என விளக்கம் அளித்துள்ளது டிக் டாக்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment