அமெரிக்க கடற்படையில் சீக்கிய அதிகாரி டர்பன் அணிய அனுமதி..!

அமெரிக்க கடற்படையில் சீக்கிய அதிகாரி டர்பன் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க கடற்படையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய அதிகாரியான சுக்பீர் டூர் கடந்த 2017 ஆம் ஆண்டு சேர்ந்தார். தற்போது இந்த சீக்கிய அதிகாரிக்கு டர்பன் அணிய அமெரிக்க கடற்படை அனுமதி அளித்துள்ளது. இவர் அவரது மத வழக்கப்படி, டர்பன் அணிந்து பணியாற்ற விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க கடற்படை, போர் முனையில் சீருடை வேறுபாடு மற்றும் கடற்படை வீரர்களின் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை இது பாதித்து விடும் என்பதால், தோல்விக்கு வழிவகை செய்யும் என்று இதற்கு அனுமதி மறுத்துவிட்டது.

பின்னர், சுக்பீர் கேப்டன் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனை அடுத்து மீண்டும் அவர் டர்பன் அணிவது குறித்து விண்ணப்பித்துள்ளார். இதில் ஒரு சில நிபந்தனைகளோடு அமெரிக்க கடற்படை இதனை அனுமதித்துள்ளது. இதனால் முதன் முதலில் டர்பன் அணிந்த பெருமையை சுக்பீர் பெற்றுள்ளார். இந்த அனுமதி வழக்கமான பணியின் போது மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. போர் முனையில் செயல்படும்போது அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.