ராபிடோ ஆப்பை பயன்படுத்துபவரா நீங்கள்?! போலீஸ் கடும் எச்சரிக்கை!

நாம் ஓர் இடத்திலுருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல பெரும்பாலும், இருசக்கர வாகனங்களை பயன்படுதி வருகிறோம். இரண்டு மூன்று பேர் ஊருக்குள் ஒரு இடத்திற்கு செல்லவதற்கு ஆட்டோவை பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது பெரு நகரங்கள் முதல், சிறு நகரங்கள் வரை இரன்டு மூன்று ஏன், ஒரு நபர் பயணம்  செய்யக்கூட ஓலா, உபர் என ஆன்லைன் நான்கு சக்கர வாகனங்களை  வாடகைக்கு புக்கிங் செய்ய ஆப்கள் வந்து குவிந்து இருக்கின்றன. தற்போது இது இருசக்கர வாகனம் வரை தொடர்ந்து விட்டது. … Read more

"பறக்கும் டாக்ஸி சேவை" விரைவில் இந்தியாவிலும்..!!

இந்தியாவின் முன்னணி டாக்ஸி சேவை நிறுவனமான உபேர் விரைவில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்ய இருக்கிறது.  இந்தச் சேவையின் மூலம் 200 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவை கூட ஒருமணி நேரத்தில் கடக்க முடியும் என கூறப்படுகிறது. உபேர் பறக்கும் டாக்ஸி சேவை நடைமுறைக்கு வருவதற்கு 5 ஆகலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பறக்கும் டாக்ஸியை, தற்போது உள்ளது போலவே மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து, பயணம் செய்யலாம்.முதல் கட்டமாக இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், … Read more

புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்கிறது உபர்..! பாதுகாப்பு கருதி உருவாக்கப்பட்டதா.?

  தனது ஓட்டுநர்களின் சவாரியை எளிதாக்கும் வகையில், பயண பகிர்வு நிறுவனமான Uber  தனது புதிய ஓட்டுநர் அப்ளிகேஷனின் அறிமுகம் குறித்து அறிவித்துள்ளது.    தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கணமும், மிகவும் எளிதாகவும் தனித்துவமான அனுபவம் கொண்டதாகவும்,  அமையும் வகையில், இந்த புதிய அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் 100 பங்காளர்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு, இந்த அப்ளிகேஷன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிளாக் ஒன்றில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு இடுகையில் கூறியிருப்பதாவது: பல … Read more

அமெரிக்காவில் UBER நிறுவனத்தின் தானியங்கி கார் மோதியதில் பெண் பலி!

உபேர் நிறுவனத்தின் தானியங்கி கார் அமெரிக்காவில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். உபேர் நிறுவனம் தானியங்கிக் கார்களை சோதனை முறையில் இயக்கி வருகிறது. தானியங்கிக் கார்கள் போக்குவரத்து சூழலுக்கேற்ப செயல்பாடுகளை அமைத்துக் கொண்டு இயங்கவல்லவை என்று கூறப்படும் நிலையில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் காரில் முதல் முறையாக விபத்து நேர்ந்துள்ளது. அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ்((Phoenix)) நகரின் புறநகர்ப் பகுதியில் உபேர் நிறுவனத்தின் தானியங்கிக் கார் சென்று கொண்டிருந்த போது சாலை யைக் கடக்க முயன்ற 49 வயதுப் பெண் … Read more

Uber,Ola கார் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

ஓலா, உபேர் கார் ஓட்டுநர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மும்பை, டெல்லி, ஐதராபாத், புனே, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில்  காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓலா, உபேர் நிறுவனங்கள் சொந்தமாகக் கார் வைத்திருக்கும் ஓட்டுநர்களிடம் அதிக வருமானம் பெறலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி ஆசைகாட்டியதாகவும், அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நிறுவனத்துக்குச் சொந்தமான கார்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், தங்களுக்குச் சொந்தமான கார்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாடகைப் பங்கீட்டை மறுசீரமைக்க வேண்டும் என்றும் … Read more

Ola , Uber கால் டாக்சி ஓட்டுநர்கள் ஞாயிறு நள்ளிரவு முதல் ஸ்டிரைக்!

ஓலா, உபேர் கால் டாக்சி நிறுவனங்களுக்காக கார் ஓட்டுபவர்கள் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள், நிறுவனத்தில் பதிவு செய்த கார்கள் என இருவகையாகப் பிரித்து சவாரி வழங்குவதில் ஓலா, உபேர் நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஈட்டலாம் என்று வாக்குறுதியின் பேரில் 5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில், போதிய சவாரி … Read more

ஊபர் மற்றும் ஓலா நிறுவனங்களை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம்..!

ஊபர் மற்றும் ஓலா ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து அந்த 2 நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் கண்டித்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசு வழி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை வேலைநிறுத்தம்!ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம்….

ஓலா, ஊபர் நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் போராட்டம் அறிவித்துள்ளது. மீட்டர் கட்டணம், நிலையான வருமானத்திற்கு அரசே வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நாளை வேலை நிறுத்தப் போராட்டம்  அறிவித்துள்ளது.ஓலாவால்  மற்ற ஓட்டுனர்கள் பாதிப்படைவதால் அதை கண்டித்து போராட்டம் … CITU உட்பட 5 மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு… source: dinasuvadu.com