இது நடந்தால் மத்திய – மாநில அரசுகளின் உறவு சிக்கலாகிவிடும் – டிடிவி தினகரன்

இந்திய ஆட்சிப்பணி விதிகளை மத்திய அரசு திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று அமமுக பொதுசெயயலாளர் டிடிவி தினகரன் ட்வீட். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இப்படி ஒரு … Read more

“சென்னையில்தான் அதிகம்…நிலைமை கை மீறிப் போவதற்குள் அரசு இதனை செய்ய வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

சென்னை:கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்றும்,சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக,சென்னையில் மட்டும் 5,098 பேருக்கு நேற்று கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், நிலைமை … Read more

“அம்மா மினி கிளினிக்….திமுக அரசின் குறி” – டிடிவி தினகரன் கண்டனம்!

புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரியார் திடலில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு மையத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது. போதிய செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் செயல்படாமல் இருந்தது. இத்திட்டம் என்பது தற்காலிகமானது,ஓராண்டு … Read more

இதற்காவது தமிழக அரசு ஏதாவது செய்யுமா? – டிடிவி

கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அப்போது அமைக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் குழு என்ன ஆயிற்று? கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சென்னை, காஞ்சிப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை தமிழக அரசின் … Read more

“திமுக….தீய சக்தி கூட்டம்” – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களின் காவல்துறை,உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என்றும்,திமுகவை ‘தீய சக்தி கூட்டம்’ என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கட்சி சார்பில் கோவை மாவட்ட மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று … Read more

மத்திய அரசு இதில் பிடிவாதம் காட்டுவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாகும் – டிடிவி தினகரன்

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் தமிழக அரசின் அனுமதியோடு தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது பற்றி விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து முதலமைச்சர் … Read more

“பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் பிற்போக்குத்தனமான கேள்வி” – சிபிஎஸ்இ-க்கு டிடிவி தினகரன் கண்டனம்!

சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கேள்வி இடம் பெற்றிருப்பதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி.-யின் பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான வினாத்தாளில் குடும்ப ஒழுக்கம் தொடர்பாக இடம் பெற்ற கேள்வியில்,கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்தால்தான் குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்படிவார்கள் என்றும், மனைவியின் விடுதலை குழந்தைகளின் மீதான … Read more

இனி ஒரு சம்பவம் இப்படி நடக்காதவாறு தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்

கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன. கன்னியாகுமரி அரசு பேருந்தில் நாரி குறவர் இணைத்த சேர்ந்தவர்கள் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் மற்றும் விழுப்புரத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடத்துனர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் அரசு பேருந்துகளில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் … Read more

வன்முறையைத் தூண்டும் பழனிசாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை? – டிடிவி தினகரன்

அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டிடிவி தினகரன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் 5-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். அப்போது, அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது … Read more

இந்த விஷயத்தில் திரு.பழனிசாமியும், திரு.ஸ்டாலினும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்வார்களா? – டிடிவி தினகரன்

பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்வீட். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக்கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், … Read more