4 மாநில சட்டசபை தேர்தல்: 8 இடங்களிலும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண்.!

Pawan Kalyan

தெலுங்கானாவில் போட்டியிட்ட நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது. கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. பெரும்பாலும் வெற்றி வாய்ப்புகள், அடுத்த ஆட்சி யாருடையது என்ற விவரங்கள் தெரியவந்து விட்டன. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. முன்னாள் முதல்வர் … Read more

தெலுங்கானாவில் முதல்வர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்..!

கமாரெட்டி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் கட்டிப்பள்ளி வெங்கட ரமண ரெட்டி  66,652 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை  பாஜக வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி தோற்கடித்தார். கமாரெட்டியில் பாஜக  வேட்பாளர் வெங்கட ரமண ரெட்டி 66,652 வாக்குகள் பெற்று  அதே தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய முதல்வர் கே சந்திரசேகர ராவை விட 6,741 … Read more

 10 ஆண்டுகால கே.சி.ஆர் சாம்ராஜ்யம் சரிகிறதா.? தெலுங்கானாவில் முன்னேறும் காங்கிரஸ்.!

Telangana Election Results 2023 - Congress vs BRS

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில  சட்டப்பேரவை தேர்தலில் மிசோராம் தவிர்த்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் , ராஜஸ்தான் , தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. காலை 8 மணி முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்டு , அதன்பிறகாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது . இதில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் ஆளும் இன்னொரு மாநிலமான சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் நிலை … Read more

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப் பதிவு நிலவரம்!

Telangana assembly elections

சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த சில நாட்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், தெலுங்கானாவில் 106 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், பதட்டமான தொகுதிகள் என கணக்கிடப்பட்ட 13 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்தல் … Read more

தெலுங்கானா தேர்தல் : அனல் பரந்த இறுதிக்கட்ட பிரச்சாரம்.! நாளை மறுநாள் மக்கள் தீர்ப்பு.!

Telangana Election 2023

இம்மாதம் அறிவிக்கப்பட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதம் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 30இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119  தொகுதியில் 98 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சியை பிடித்து இருந்தது பாரதிய ராஷ்டிரிய கட்சி (பிஆர்எஸ்). கடந்த 2 முறையும் சந்திரசேகர … Read more

ஆம் ஆத்மிக்கு ரூ.100 கோடி லஞ்சம்.. மதுபான ஊழலில் சிக்கிய தெலுங்கனா முதல்வர் மகள்!

டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதாவும் ஒருவர் என அமலாக்கத்துறை தகவல். டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை முடிவில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று கூறி விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை குற்றசாட்டை முன்வைத்திருந்தது. அதாவது, டெல்லியில் ஆம் ஆத்மி அரசானது தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி மற்றும் சலுகைகளை வழங்கியது. இதன்பின் மதுபான கொள்கை முடிவில் ஊழல் நடந்துள்ளது என கூறப்பட்டது. இதன் விளைவாக டெல்லி … Read more

ஒருதலை காதல் விபரீதம்.. 100 அடியாட்களை பெண் வீட்டுக்கு அனுப்பிய இளைஞர்.!

தெலுங்கானாவில் ஓர் இளைஞர் தான் ஒருதலையாக காதலித்த பெண்ணின் வீட்டிற்கு நிச்சயதார்த்தம் அன்று 100 அடியாட்களை அனுப்பி அந்த பெண்ணை கடத்தியுள்ளார்.  தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் பல் மருத்துவராக உள்ளார். இவருக்கு நேற்றைய தினம் அவரது சொந்த ஊரில் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அதே ரங்கா ரெட்டி பகுதியில் டீக்கடை நடத்திவரும் நவீன் எனும் இளைஞர் இந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும், பலமுறை அந்த பெண்ணிடம் திருமணம் … Read more

முதல் திருநங்கை அரசு மருத்துவர்கள்.! தெலுங்கானா அரசு அசத்தல்.!

தெலுங்கானாவில், முதல்முறையாக திருநங்கை அரசு மருத்துவராக இருவர் நிமிக்கப்பட்டுள்ளனர். பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என இரு திருநங்கைகள் மருத்துவம் முடித்து, இருந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் வேலை மறுக்கப்பட்ட நிலையில் தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவ வேலையை வழங்கியுள்ளது. தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை அரசு மருத்துவர்கள் இவர்கள் தான் என்பது . இருவரும் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் மருத்தவர்களாக சேர்ந்துள்ளனர். இது பற்றி பிராச்சி ரத்தோட் கூறுகையில், ‘ அரசின் … Read more

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி கைது!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி, பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.டி.பி. நிறுவனருமான ஒய்.எஸ்.சர்மிளா தெலுங்கானாவில் பாதயாத்திரையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி (ஒய்எஸ்ஆர்டிபி) தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, இன்று டிஆர்எஸ் தொண்டர்களால் அவரது கேரவனை தாக்கி எரித்ததாக, கட்சி தொண்டர்கள் கூறியதையடுத்து வாரங்கல் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். வாரங்கல் மாவட்டத்தில் ஒய்.எஸ்.சர்மிளாவின் பாதயாத்திரையின் போது இந்த மோதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது. … Read more

தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்ட ராகுல் காந்தி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டார் ராகுல் காந்தி. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை’ பயணம் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்.7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 57வது நாளாக இன்று தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், இளைஞர்களும் அவருடன் … Read more