சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandigarh Mayor poll

கடந்த 30ம் தேதி சண்டிகரில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. மொத்தம் 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன. இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, பாஜகவின் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தலின்போது வாக்குசீட்டுகளில் தேர்தல் அதிகாரி, திருத்தம் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி … Read more

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க சரத் பவார் கோரிக்கை..!

Sharad Pawar

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு குழுவாக பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதற்கிடையில்  கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அஜித் பவார்,  சரத் பவார் அணிக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த … Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு..! இறுதி விசாரணை 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இறுதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலை மூடலுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று தொடங்கியது. அதன்போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனையை உச்சநீதிமன்றம் முன் வைத்தது. மேலும், தற்போது உள்ள இடத்தில் அமைந்துள்ள காப்பர் தொழிற்சாலை … Read more

தேர்தல் பத்திர முறைகள் ரத்து… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

electoral bond

அரசியல் கட்சிகள் நிதி பெற வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கடந்த 2018ல் கடும் எதிர்ப்பை மீறி மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறலாம். ஆனால், ஒருவரிடம் இருந்து அதிகமாக தொகை பெரும் அரசியல் கட்சிகள், அதன் முழு விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என இருந்தது. பின்னர், இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டதால், நன்கொடைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை … Read more

தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

SUPREME COURT

அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், வங்கிகள் உடனடியாக தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திர முறை மூலம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் ஸ்டேட் வங்கி (SBI) வழங்க வேண்டும் என … Read more

தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத் பவார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!

Sharad Pawar Supreme Court

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் அதிக எம்.எல்.ஏ.க்களை ஆதரவு கொண்ட அஜித் பவார் பாஜக ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்று கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த 53 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் அஜித் பவார் பிளவுக்கு பிறகு சரத் பவாருக்கு தற்போது 12 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கட்சி … Read more

அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு.. ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

supreme court

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதாவது, முடித்துவைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு எதிராக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, தலைமை நீதிபதி … Read more

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Jharkhand CM Hemant Soren

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை நேற்று முன்தினம் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதுக்கு முன்பே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ஹேமந்த் சோரன். இதனால் ஜார்க்கண்ட் அமைச்சரவையில் பட்டியலினத்தோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் … Read more

முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!

Valarmathi

சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மனு மீதான விசாரணை  பிப்ரவரி 6-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில் கடந்த 2001முதல் 2006 சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி இருந்தார். அப்போது அவரும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டது. இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் … Read more

பொன்முடி வழக்கு – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

ponmudi

சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கடந்த 2006 – 2011ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை … Read more