செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32-ஆவது முறையாக நீட்டிப்பு!

senthil balaji

Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 32-ஆவது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதன்பின் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி தாக்கல் … Read more

ஹேமந்த் சோரனின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

Hemant Soren

Hemant Soren: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. நில அபகரிப்பு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி இரவு அமலாத்துறையால் கைது செய்யப்பட்டு ராஞ்சியில் உள்ள முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கைது முன்பாகவே தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோர ராஜினாமா செய்திருந்தார். எனவே, நில மோசடி வழக்கில் கைதான ஹேமந்த் சோரன் உட்பட 5 பேர் மீது ஜார்கண்ட் … Read more

செந்தில் பாலாஜியின் காவல் 31ஆவது முறையாக நீட்டிப்பு!

senthil balaji

Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 31ஆவது நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி அமலாத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன்பின் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற காவலில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரி பல முறை மனு தாக்கல் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு!

arvind kejriwal

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் ஏப்ரல் 1ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை காவல் விதிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் … Read more

சிறையில் இருந்துகொண்டே முதல்வர் வேலையை பார்க்கும் கெஜ்ரிவால்.! பறக்கும் உத்தரவுகள்…

Delhi CM Arvind Kejriwal

Arvind Kejriwal : டெல்லி சிறையில் இருந்து கொண்டே மாநில முதல்வராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கதுறை விசாரணையில் இருந்தாலும் முதல்வராக தனது பதவியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். … Read more

கைது செய்யப்பட்ட பின் கெஜ்ரிவால் கூறிய வார்த்தைகள்…

arvind kejriwal

Arvind Kejriwal: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்தனர். Read More – கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு! அதுமட்டுமில்லாமல், பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் குவித்துள்ளனர். இன்று நாடு தழுவிய போராட்டமும் அறிவிக்கப்பட்டது. … Read more

கெஜ்ரிவால் கைது..! வீட்டை சுற்றி 144 தடை.. டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Arvind Kejriwal

Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து, அவரது இல்லம் சுற்றி 144 தடை பிறப்பித்து, தலைநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று இரவு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவலை அமலாக்கத்துறை கைது செய்தது. Read More – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை தேர்தல் நெருங்கும் … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு… முதல் முறையாக விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு!

C.Vijayabaskar

ED Raid: அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு முதல்முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கருத்து வேறுபாடுகள், வார்த்தை மோதல்களை தொடர்ந்து பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அறிவித்திருந்தது. Read More – அதிமுக கூட்டணியை இறுதி செய்தது தேமுதிக! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? இருப்பினும், அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது நாடகம் என்றும் மீண்டும் தேர்தலின்போது ஒன்று கூடுவார்கள் எனவும் … Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 22வது முறையாக நீட்டிப்பு!

senthil balaji

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற கவலை 22-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு கடந்த  ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன்பின், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு … Read more

அமலாக்கத்துறை 6-வது சம்மனுக்கும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால்..!

Arvind Kejriwal

டெல்லி அரசு புதிய கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனால் விசாரணைக்கு ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பி வருகிறது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதுவரை 5 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தனக்கு அனுப்பப்படும் அனைத்து சம்மன் சட்டவிரோதமானது என கூறி வருகிறார். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி கலால் … Read more