அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். மேலும்  குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக உள்ளது. 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அதிமுக அரசு கொடுத்துள்ளது.மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசு … Read more

உள்ளாட்சிகளில் பழைய சொத்துவரி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

உள்ளாட்சிகளில் பழைய சொத்துவரி முறையே தொடரும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்துவரியே வசூலிக்கப்படும். கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும் – மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சொத்துவரி குறைப்பிற்கு எந்த தொடர்பும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.    

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன்  உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது  நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய ரூ.2,029 கோடி நிதியை வழங்கவும், இயந்திர உற்பத்தி பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்கவும் அமைச்சர் வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

மக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  வேண்டுகோள்

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.அவரது பதிவில்,  வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன் மக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு குழுவே, அமைப்போ, அரசோ மட்டும் மழைநீர் சேகரிப்பை முழுமையாக செய்து முடிக்க முடியாது. அனைவரும் இணைந்து மழைநீரை சேமிப்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்று  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்-அமைச்சர் வேலுமணி

சென்னையில் நடைபெற்ற குடிநீர் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதன் பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கவும், ஆய்வு செய்யவும் 200 குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. 2 லட்சம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

மழை பெய்ய ஆரம்பித்ததும் தண்ணீர் பிரச்சனை காணாமல் போகும்-அமைச்சர் வேலுமணி

மழை பெய்ய ஆரம்பித்ததும் தண்ணீர் பிரச்சனை காணாமல் போகும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வறட்சி நிலவி வருகிறது.இந்த நிலையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், மோட்டார் பழுது போன்ற காரணங்களால் சில இடங்களில் தண்ணீர் வராமல் இருக்கிறது. பிரச்சனை உள்ள இடங்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது.மழை பெய்ய ஆரம்பித்ததும் தண்ணீர் பிரச்சனை காணாமல் போகும் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.1,00,00,000 இழப்பீடு கேட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

ஒரு கோடி மான நஷ்டஈடு கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தது.அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ஒரு கோடி மான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை இன்று … Read more

தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தனியார் லாரிகள் அதிக விலையில் தண்ணீர் விற்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 560 கனஅடி நீர், ஜூன் 15-ம் தேதி வரை வினியோகம் செய்ய முடியும் . அதன் பிறகும் மழை பெய்யாவிட்டாலும் 500 கனஅடி நீர் அக்டோபர் வரை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 126 … Read more

திருப்பரங்குன்றம்- திருவாரூரில் நாங்களே வெற்றி பெறுவோம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி…

திருப்பரங்குன்றம், திருவாரூரிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவையில்  மாவட்ட அண்ணா டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்க துவக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கனமழை, பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஆயத்த பணிகளை கண்காணிக்கவும், துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் உள்ளாட்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் பேரிடர் மேலாண்மை வருவாய் துறைகளை இணைத்து கூட்டங்கள் நடத்தி … Read more

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம்:அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடக்கக் கூடாது என்பதே திமுகவின் எண்ணம்,தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவரவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என திமுகவின் குற்றசாட்டுக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.