கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது கடித்த பக்கத்து வீட்டு மலைப்பாம்பு …!

ஆஸ்திரியா நாட்டில் உள்ள ஒருவர் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது பக்கத்து வீட்டு மலைப்பாம்பு கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரியாவில் வசிக்கும் 65 வயதான ஒரு நபர் திங்கள்கிழமை காலை தனது வீட்டில் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது பின்னால் ஏதோ கடித்தது போன்று உணர்ந்தார்.பின்னர்,அவர் கழிப்பறைக்குள் பார்த்தபோது , ​5 அடி நீளமுள்ள அல்பினோ ரெட்டிகுலேட்டட் என்ற மலைப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து,பாம்பை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக மீட்பு துறையினரை அவர் அழைத்தார். மேலும்,இது குறித்து போலீசார் கூறுகையில்,”பக்கத்து … Read more

வீட்டில் வளர்க்க பாம்பை ஆர்டர் செய்த நபர்…! விஷம் நீக்கப்படாத பாம்பு டெலிவரி ஆனதால் அதிர்ச்சி…!

வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். பாம்பை விற்ற நிறுவனம், விஷம் எடுக்கப்பட்ட பாம்பிற்கு பதிலாக, விஷம் எடுக்கப்படாத பாம்பை வழங்கியுள்ளது. சீனாவைப் பொறுத்தவரையில் பல விசித்திரமான விலங்குகள் மற்றும் பறவைகளை தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளப்பதுண்டு. சீனாவில் பாம்புகளை வீட்டில் வளர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசித்து வரும் ஒருவர் தனது வீட்டில் பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இவ்வாறு ஆர்டர் செய்தவருக்கு பாம்பு வீட்டிற்கு வந்தது. பொதுவாக … Read more

மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு சீனர்கள் உண்ணக் கூடிய 5 அருவருப்பான உணவுகள்..!

நாம் அருவெருப்பென நினைக்கும் எந்தெந்த உணவுகளை, சீனர்கள் உணவாக உட்கொள்கின்றனர் என்று பார்ப்போம். சீனாவில் உணவை பொறுத்தவரையில், வானத்தில் பறக்கும் பறவைகள் முதல் தரையில் ஊரும் பிராணிகள் வரை அனைத்தையுமே உணவாக உட்கொள்கின்றனர். தற்போது. இந்த  பதிவில்,நாம் அருவெருப்பென நினைக்கும் எந்தெந்த உணவுகளை, சீனர்கள் உணவாக உட்கொள்கின்றனர் என்று பார்ப்போம். பாம்பு சூப் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என கூறுவர். ஆனால், சீனாவை  பொறுத்தவரையில், பலரும் பயப்படக் கூடிய, அருவருக்கக் கூடிய பாம்பை சூப்பாக செய்து சாப்பிடுகின்றனர். இந்த சூப் … Read more

காயம்பட்ட பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் புத்த மத துறவி!

காயம்பட்ட பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் புத்த மத துறவி வில்லாதா, பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின், காட்டுக்குள் விடுகிறார்.   மியான்மர் நாட்டை சேர்ந்த புத்த மத துறவி வில்லாதா. இவருக்கு வயது 69. இவர் தான் தங்கியிருக்கும் சேக்காடு மடத்தில், பாம்புகளுக்கு என்று தனியாக அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகிறார். இவர் வைத்துள்ள இந்த முகாமில் மலைப் பாம்பு, கண்ணாடி விரியன், ராஜநாகம் ஆகியவை பாதுகாக்கப்பட்டு பராமரித்து வருகிறார். இவர் இந்த பாம்புகளை … Read more

சிம்புவால் ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்ட பாம்பு – நேரில் சம்மன் அனுப்ப வனத்துறையினர் முடிவு!

சிம்புவால் ஈஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக படக்குழுவினருக்கு நேரில் சம்மன் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் மாதவன் மீடியாவின் தயாரிப்பில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால் மற்றும் பாரதிராஜா … Read more

இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!

இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு. கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூர் அருகே உள்ள புளிகரை வயல்பகுதியில், ஏஞ்சல் என்பவருக்கு சொந்தமான வயல்பகுதியில், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வயலில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்த தொழிலாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில்  இடத்திற்கு, பற்காம்புப்பிடிக்கும் பயிற்சி பெற்ற, வனத்துறை பணியாளர் செல்வராஜுடன் வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து, சின்னார் வனப்பகுதியில் விட்டனர்.

வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்த சாரை பாம்பு! அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம்!

வட்டார கல்வி அலுவலகத்திற்குள் புகுந்த சாரை பாம்பால் அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம். திருவண்ணாமலையில், வந்தவாசியில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிற நிலையில், அங்கு அலுவலர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், பகல் 12 மணியளவில், அலுவலகத்திற்குள், 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சிறிது நேர … Read more

சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கைது!

சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கைது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோத்தமங்கலம் வனசாரகத்திற்கு உட்பட்ட பகுதியில், மர்மநபர் ஒருவர் பாம்புகளை சமைத்து சாப்பிடுவதாக, வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. நேற்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், வனத்துறையினர் பிஜு என்ற நபரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பிஜு சாரைப்பாம்புகளை பிடித்து அதை சமைத்து சாப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்த இறைச்சியை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் , அவர் சாரைப்பாம்பு இறைச்சியை மலைப்பாம்பு இறைச்சி என … Read more

இங்கிருந்தும் பாம்பு வருமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கழிவறையில் இருந்து எட்டி பார்க்கும் பாம்பு. பாம்பு என்றாலே பலரும் பயப்பதாக கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால், அது எங்கிருந்து வேண்டுமானாலும், நம்மை தாக்கக் கூடும். எனவே நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக உள்ளது. அமெரிக்காவில், வெஸ்ட்டர்ன் கழிவறையில் இருந்து ப்பாம்பு ஒன்று வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ, கழிவறையில் இருந்து எட்டி பார்க்கும் பாம்பை, ஹோல்ப் ஸ்டிக்கை பயன்படுத்தி வெளியேற்ற … Read more

உத்தரகண்ட் வன அதிகாரிகள் மிகவும் அரிதான ‘சிவப்பு பவள குக்ரி’ பாம்பை மீட்டனர்.!

உத்தரகண்ட் மாநிலத்தில் மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு மீட்கப்பட்டது, உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் காணப்பட்ட ஒரு மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையால் மீட்கப்பட்டது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். நைனிடாலின் பிந்துக்கட்டா பகுதியில் இருந்து பாம்பு மறைந்திருந்த ஒரு வீட்டில் இருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. வன அதிகாரிகள் கூறுகையில், 1936 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி பகுதியில் இந்த அரிய பாம்பு முதன்முதலில் … Read more