உ.பி-யில் 14 வயது தலித் மாணவரை கட்டையால் தாக்கிய ஆசிரியர்

உத்திர பிரதேசத்தில் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதற்காக 14 வயது மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதற்காக 14 வயது தலித் மாணவரை ஆசிரியர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ஆசிரியர் முதலில் அனுமதி மறுத்துள்ளார், இரண்டாவது முறையாக கேட்டபோது, ​​மாணவனை கட்டையால் அடித்தாகவும், அதில் சிறுவன் மயங்கி விழுந்ததாகவும் கூறினர். மேலும் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு SC/ST சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு … Read more

30 வருடங்களாக கழிவறையில் உணவு தயாரிப்பு…! அதிரடியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்ததையடுத்து, உணவகத்தை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவு. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற உணவுகளில் கழிவறையில் தயாரிக்கப்பட்ட செய்தி நகராட்சி அதிகாரிகள் ரகசியமாக கிடைத்ததையடுத்து, அவர்கள் உணவகத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது உணவகத்தின் குளியலறையில் கடந்த 30 ஆண்டுகளாக … Read more

மும்பை : திருநங்கைகளுக்கான முதல் கழிப்பறை வசதி …!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகன் எனும் பகுதியில் பிரத்தியேகமாக திருநங்கைகளுக்கான முதல் கழிவறை இன்று திறக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சார்தி எனும் அறக்கட்டளை இந்த பொது கழிப்பறை கட்டி உள்ளது. திருநங்கைகளின் வசதிக்காக சில பகுதிகளில் பாலின வேறுபாடு இல்லாத நவீன கழிப்பறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பறை இதுதான் எனது சார்தி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு-ரூ.36 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை!

கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிக்காக ரூ.36.5 கோடி நிதி விடுவித்து தமிழக அரசு அரசாணை. தமிழகத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் ,கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தலுக்காக செப்டம்பர் 21 முதல் ஏப்ரல் 22 வரைக்கான நிதியான ரூ.36.50 கோடியை மாநில நிதி ஆணையத்தின் (SFC) மானியத்தை பயன்படுத்த அனுமதி மற்றும் உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்,காலை மற்றும் மதியம் ஒரு முறை என … Read more

விமான குப்பைத்தொட்டியில் கிடந்த பிறந்த குழந்தை..!

மொரிஷியஸ் ஏர்பஸ் விமானத்தின் குப்பைத் தொட்டியில் டாய்லெட் பேப்பரால் மூடப்பட்டு கிடந்த பிறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டது. கடந்த ஜனவரி 1 சனிக்கிழமை அன்று ஏர் மொரீஷியஸ் ஏர்பஸ் ஏ330-900 ரக விமானத்தின் குப்பைத் தொட்டியில் டாய்லெட் பேப்பரில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று இருந்துள்ளது. வழக்கமான சுங்கச் சோதனையின் போது விமானத்தை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் குழந்தையை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, விமானத்தில் பிரசவித்ததாக சந்தேகிக்கப்படும் மடகாஸ்கரைச் சேர்ந்த … Read more

வீடு இல்லாததால் 2 ஆண்டுகளாக கழிவறையில் வாழ்ந்த குடும்பம்…!

வீடு இல்லாததால் 2 ஆண்டுகளாக கழிவறையில் வாழ்ந்த குடும்பம்.  தெலங்கானா மாநிலம், மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பாலநகர் மண்டல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரது கணவர் 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததையடுத்து, தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பதாக தெலுங்கானாவில் பெய்த கனமழையின் போது அவரது வீடு இடிந்து விழுந்தது. இதன் காரணமாக இவர் அருகில் இருந்த சமுதாய கூடத்தில் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் … Read more

கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது கடித்த பக்கத்து வீட்டு மலைப்பாம்பு …!

ஆஸ்திரியா நாட்டில் உள்ள ஒருவர் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது பக்கத்து வீட்டு மலைப்பாம்பு கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆஸ்திரியாவில் வசிக்கும் 65 வயதான ஒரு நபர் திங்கள்கிழமை காலை தனது வீட்டில் கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது பின்னால் ஏதோ கடித்தது போன்று உணர்ந்தார்.பின்னர்,அவர் கழிப்பறைக்குள் பார்த்தபோது , ​5 அடி நீளமுள்ள அல்பினோ ரெட்டிகுலேட்டட் என்ற மலைப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து,பாம்பை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக மீட்பு துறையினரை அவர் அழைத்தார். மேலும்,இது குறித்து போலீசார் கூறுகையில்,”பக்கத்து … Read more

கொரோனா நோயாளிகளுக்கு கழிப்பறையில் ஆக்சிஜன் வசதி!

கொரோனா நோயாளிகளுக்கு கழிப்பறையில் ஆக்சிஜன் வசதி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில், கழிவறை செல்லும் கொரோனா நோயாளிகள், ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்பதை தவிர்க்க, கழிவறையில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, … Read more

பள்ளி குழந்தைகளின் சிரமத்தை கண்டு 30 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை!

பள்ளி குழந்தைகளின் சிரமத்தை கண்டு 30 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை. திரு.சதீஷ் குமார் என்பவர், ஈரோடு மாவட்டம் சித்தோடு என்ற சிறிய கிராமத்தில் பிறந்த வளர்ந்தவர். இவர் தனது பள்ளி படிப்பை முடித்த நிலையில், தனது கடின உழைப்பால் பன்னீர் வணிகத்தில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல், பால் வணிகத்தில் ஈடுபட்டு மில்கி மிஸ்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். இந்நிலையில், அவர் பிறந்த கிராமமான, சித்தோடு தொடக்கப் பள்ளியின் கழிப்பறையின் மிக மோசமான … Read more

கழிப்பறையில் 7 நாட்கள் தனிமையில் இருந்த 28 வயது இளைஞர்! காரணம் என்ன?

கழிப்பறையில் 7 நாட்கள் தனிமையில் இருந்த 28 வயது இளைஞர். தமிழ்நாட்டிலிருந்து திரும்பி வந்த 28 வயதான இளைஞர் ஒருவர், ஒடிசாவின் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்திற்கு சென்றுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், அந்த நிறுவனத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மனஸ் பத்ரா, சுதுகாந்தி பள்ளியில் அரசு நடத்தும் தற்காலிக மருத்துவ முகாமில் (டி.எம்.சி) அனுமதிக்கப்பட்டு ஏழு … Read more