, ,

சிம்புவால் ஈஸ்வரன் படத்தில் பயன்படுத்தப்பட்ட பாம்பு – நேரில் சம்மன் அனுப்ப வனத்துறையினர் முடிவு!

By

சிம்புவால் ஈஸ்வரன் படத்தில் பாம்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக படக்குழுவினருக்கு நேரில் சம்மன் அனுப்ப வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் மாதவன் மீடியாவின் தயாரிப்பில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால் மற்றும் பாரதிராஜா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்த படம் வருகிற 221 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியிடப்படும் என படக்குழு சார்பில் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு பாம்பை தனது கையால் பிடிப்பது போன்ற வீடியோ காட்சி ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலாகியாது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் ஆகியோருக்கு வனத்துறையினர் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு செய்தி போன்ற ஒரு அறிக்கையில் விளக்கத்தை சுசீந்திரன் அவர்கள் தெரிவித்து இருந்தார். ஆனால் இது திருப்தி அளிக்காததால் வனத்துறையினர் மூவருக்கும் நேரில் சமன் அளிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Dinasuvadu Media @2023