#Breaking: ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்பு பள்ளிகளும் திறப்பு – பஞ்சாப் அரசு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்தது அம்மாநில அரசு. இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் பல தளர்வுகளை அமல்படுத்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு தடை நீடித்து வருகிறது. சில மாநிலங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கி இருக்கும் போது, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு …? இன்று ஆலோசனை…!

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு … Read more

மடிக்கணிணி இல்லை., மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது … Read more

பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்

பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் தாமதம் செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பூட்டப்பட்ட பள்ளிகள், நாளை முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவர்கள் பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறப்பதில் … Read more

#BREAKING: பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா – பள்ளி மூடல்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பள்ளி மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சேலம், கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி பாதிப்பு இருந்ததால் மாணவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா … Read more

நாளை முதல் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் நாளை முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்து, பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. கடந்த சில மாதங்களாக தான் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பல கட்டமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு … Read more

பள்ளிகள் திறப்பு : நாளைக்குள் கருத்து கேட்க உத்தரவு!

நாளை மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்து தொகுப்பினை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து, இன்று முதல் 8-ம் தேதி வரை பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது நாளைக்குள் கருத்து கேட்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி … Read more

இந்த மாதம் பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் இந்த மாதம் பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கல்வி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 8 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு  கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், மதுராந்தகம் அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளை இந்த … Read more

குஜராத்தில் பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 23 முதல் மீண்டும் திறப்பு.!

குஜராத் மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வருகின்ற நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து குஜராத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் நவம்பர் 23 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.இருந்தாலும், தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால், அதற்கான முடிவை நேற்று அறிவிப்பது குறித்து கருத்துக்களை கேட்ட பின்னர் முடிவு செய்வதாக அம்மாநில அரசு கூறியது. இது குறித்து, கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா கூறியதாவது,”குஜராத் முதல்வர் விஜய் … Read more

பள்ளிகள் திறப்பு: 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து வரும் 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவிய கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அண்மையில், வருகின்ற 16-ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளும், அனைத்து இளநிலை படிப்பு துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்காக, … Read more