இந்த மாதம் பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் இந்த மாதம் பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கல்வி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 8 மாதங்களுக்கு பிறகு இறுதியாண்டு மாணவர்களுக்கு  கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், மதுராந்தகம் அருகே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளை இந்த மாதம் திறப்பது சாத்தியமில்லை என்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.