அமைச்சர் செங்கோட்டையன் மீது முக ஸ்டாலின் விமர்சனம்.!

தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு அமைச்சர் என்றால் அது செங்கோட்டையன் தான் என்று முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு அமைச்சர் என்றால் அது அமைச்சர் செங்கோட்டையன் தான் என்றும் கல்வித்துறையில் ஒரு அறிவிப்பை வெளியிடும் அமைச்சர் மறுநாளே அதற்கு மறுப்பு … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார் – அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு-கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார் என்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். 11ம் வகுப்பு தேர்வு ரத்து குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வல்லுநர்களுடன் கல்வித்துறை ஆலோசித்து, முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என்றும் … Read more

மடிக்கணிணி இல்லை., மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது … Read more

பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி ! அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில்  பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.நோய்க்கட்டுப்பாடு பகுதி தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் … Read more

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பது சாத்தியமா ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்தும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேலாகி உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு  எப்போது என்ற கேள்வி வெகுவாக எழுந்து வந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிக்கூடங்களை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கொரோனா சூழ்நிலை மாறிய … Read more

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ! தேர்வு நேரம் நீட்டிப்பு

 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் தேர்வு நடைபெறுகிறது. முதலில் 3 மணி நேரம் தேர்வு எழுத அனுமதி அளித்த நிலையில் பின்னர் அது இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது.ஆனால் தற்போது இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத உள்ள நிலையில் தேர்வு நேரத்தை  நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில்  10, … Read more