ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் ரெம்டெசிவிரை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது கடும் சவாலாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 18 முதல் 44 … Read more

“எனது நண்பரின் தாயாருக்கு உடனடியாக உதவி தேவை”- ராகுல் தெவாத்தியா ட்வீட்!

இந்தியாவில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தனது நண்பரின் தாயாருக்கு ரெம்டெசிவிர் மருந்து உடனடியாக தேவைப்படுவதகாக ராகுல் தெவாத்தியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொரோனா இரண்டாம் அலையில் முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. … Read more

மருந்தை பதுக்கும் பாஜகவினர்; துணை போன தேவேந்திர பட்னாவிஸ்? பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!

உயிர் காக்கும் மருந்தை பதுக்கும் பாஜகவினர், துணை போன தேவேந்திர பட்னாவிஸ்? பிரியங்கா காந்தி கடும் கண்டனம். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தாக இருப்பதால், அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வந்த நிலையில், மும்பை போலீசார் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, பாஜக மூத்த … Read more

#Breaking: “ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை”- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், அம்மாநிலத்தில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், டெல்லியில் கொரோனா பேரால் தொடர்பாக … Read more

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான புதிய மருந்தை அங்கீகரித்த ஜப்பான்.!

கொரோனா தடுப்பு மருந்தாக ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மருந்து பட்டியலில் டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் தடுப்பு மருந்தை பயன்படுத்த ஜப்பான் நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் போராடி வருகின்றன. பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், கொரோனாவுக்கு மருந்து கணடறிய தீவிர ஆராய்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், பிரிட்டனில், அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக டெக்ஸாமெதாசோன் ( Dexamethasone ) எனும் மருந்தை பயன்படுத்தியுள்ளது. இந்த தடுப்பு மருந்தை … Read more

கொரோனா எதிர்த்துப் போராட ..ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்ய அனுமதி.!

இந்தியாவில் ஒரு மருந்து சந்தைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் தேவை. இந்நிலையில், மிக அவசர தேவைக்காக கொரோனா நோய்க்கு பயன்படும்  ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்த கடந்த மே 29-ம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு சில கட்டுப்பாடுகளுடன்  கடந்த 1-ம் தேதி அனுமதி வழங்கியது. இதனால், ரெம்டெசிவிர் மருந்து அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. கிலீட் சைன்சஸ் என்ற நிறுவனத்தால் இந்த ரெம்டெசிவிர் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more

எபோலா வைரஸ் மருந்தானது கொரோனாவை எதிர்த்து போராடுகிறது.!

எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தானது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா? என கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்தானது தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த … Read more