மருந்தை பதுக்கும் பாஜகவினர்; துணை போன தேவேந்திர பட்னாவிஸ்? பிரியங்கா காந்தி கடும் கண்டனம்!

உயிர் காக்கும் மருந்தை பதுக்கும் பாஜகவினர், துணை போன தேவேந்திர பட்னாவிஸ்? பிரியங்கா காந்தி கடும் கண்டனம்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தாக இருப்பதால், அதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருந்து நிறுவனம் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய இருப்பதாக தகவல் வந்த நிலையில், மும்பை போலீசார் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், காவல் நிலையம் சென்று அந்த மருந்து நிறுவன உரிமையாளரை விடுவிக்க வேண்டும் என கோரியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி, ரெம்டெசிவிர் மருந்துக்காக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் அலை மோதுகிறார்கள். உயிரைக் காக்க ஒரு சிறிய மருந்துக்காக மக்கள் போராடி வருகிறார்கள்.

ஆனால், பாஜகவைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர், பதவியில் இருப்பவர், ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கியது மனிதநேயத்துக்கு எதிரான குற்றம் என கண்டனம் தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் சிலரும், தேவேந்திர பட்னாவிசும் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இன்று பிரபல ஊடகத்தில் பேசிய ப்ரியங்கா காந்தி, கடந்த 6 மாதங்களில் 1.1 மில்லியன் ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்று நாம் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். ஜனவரி-மார்ச் மாதங்களில் 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது.

இந்த நேரத்தில் 3-4 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்தியர்கள் ஏன் முன்னுரிமை பெறவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி, நகைச்சுவையில் இருந்து இறங்கி மக்கள் முன் அமர்ந்து அவர்களுடன் பேசுங்கள் என்றும் அவர் எவ்வாறு உயிரைக் காப்பாற்றப் போகிறார் என்பதை மக்களிடம் சொல்லுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்