ஜல்லிக்கட்டு – போராடியவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் போராடியவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம். ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கடந்த 2017-ஆம் ஆண்டு ரயில் மறியலில் ஈடுபட்டு கைதான 24 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வன்முறையில் ஈடுபட்டதாக கைதானவர்களை விடுவிக்க மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த 2017ல் போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில், மதுரை செல்லூர் ரயில் மேம்பாலத்தில் ரயிலை நிறுத்தி மாணவர்கள் மற்றும் … Read more

கொரோனா இரண்டாம் அலை எதிரொலி : தள்ளிவைக்கப்பட்ட எம்ஜிஆர் மகன் பட வெளியீடு!

இயக்குனர் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் பட வெளியீடு கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சமுத்திரகனி, சத்தியராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கக்கூடிய புதிய பொழுதுபோக்கு திரைப்படம் தான் எம்ஜிஆர் மகன். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் சசிகுமார் அப்பா மகனாக நடிக்க, இருவருக்குமிடையில் ஏற்படக்கூடிய சண்டை எப்படி இடையில் பாசமாக மாறுகிறது என்பது குறித்து இந்த படத்தில் கூறப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 23-ஆம் … Read more

தனுஷின் கர்ணன் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் கர்ணன் படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு மற்றும் லாலு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட்- 25! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கொரோனா காரணமாக அடிக்கடி ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதம் தான் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கேலி ஜோதி புகழாக அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் ஜேம்ஸ்பாண்ட் 25. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் இந்த படத்தின் மூலம் ஏற்கனவே 24 கதைகளை கொடுத்துள்ள நிலையில், தற்பொழுது 25 வது படமாக புதிய கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நபர் 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார்!

உத்தரப் பிரதேச மாநிலம், மிர்சாபூரை சேர்ந்தவர் பன்வாசி லால். இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். பன்வாசி லால் மனநிலை சரியில்லாதவர் ஆவார்.  இவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவர் 2020 நவம்பர் 17 அன்று அட்டாரி எல்லை வழியாக ஒப்படைக்கப்பட்ட நிலையில், மனநிலை காரணமாக அவர் வீட்டிற்கு செல்லும் வழி தெரியாது. அவரை மீண்டும் அழைத்து வர அவரது குடும்பத்தினர் அமிர்தசரஸ் சென்றனர். ஜனவரி … Read more

2,642 விசாரணை கைதிகள் விடுவிப்பு – சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தி, சிறிய குற்றங்களுக்கான கைதான 51 கைதிகளுக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டு மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் … Read more

அஜித்தின் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா?

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  கொரோனா எதிரொலியால் அணைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தல அஜித்தின் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகுமா? இல்லையென்றால் தாமதமாகுமா? என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

27-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது! டி.ராஜேந்தர் அதிரடி!

டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோக சங்க தலைவராக உள்ளார்.  இவர் அளித்துள்ள பேட்டியில் டிடிஎஸ் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர்  பேசுகையில், திரைப்படங்களுக்கான டிடிஎஸ், தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இல்லாமல் தமிழகத்தில் மட்டும்தான் விநியோகஸ்தர்கள் இந்த டிடிஎஸ் கட்ட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இப்படி … Read more

ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அட்லீ..!

தற்பொழுது அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைத்து வந்தார். இந்த படத்தின் இயக்குனர் அட்லீ, ரசிகர்கள் மற்றும் மக்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கு #AskAtlee என்ற ஹாஷ்டாக் மூலம் பதிலளித்து வரார். தற்பொழுது இந்த ஹாஷ்டாக், இந்தியளவு ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படம் எப்போது ரிலீஸ்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இவர் மேலும் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் விஜய் சுந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத்தமிழன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம், முழு ஆக்சன் திரைப்படமாக இருக்கும் … Read more