2,642 விசாரணை கைதிகள் விடுவிப்பு – சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக சிறையில் உள்ள கூட்டத்தை குறைக்க ஏதுவாக சிறிய குற்றங்களாக கருதப்படும் திருட்டு வழக்குகள், கூட்டுக் கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் போன்ற சிறிய குற்றங்கள் செய்தவர்களை மட்டும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 12 மாவட்ட நீதிமதிகள் மதுரை மத்திய சிறைக்கு வந்து விசாரணை நடத்தி, சிறிய குற்றங்களுக்கான கைதான 51 கைதிகளுக்கு சொந்த ஜாமீன் வழங்கப்பட்டு மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் 2,642 விசாரணை கைதிகளை சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விடுப்பில் உள்ள கைதிகளுக்கு பரோல் காலத்தை நீடிப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வந்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்