பணவரம்பை நிர்ணயிக்கும் அதிகாரம் பயனர்கே!Debit மற்றும் Credit card புதிய விதிமுறைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக  புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.அவ்விதிமுறைகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.அதன்படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களில் மட்டுமே உபயோகிக்க முடியும் என்றும் வெளிநாடுகளில் … Read more

மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் – நிதியமைச்சர்

பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் கடன் பெறலாம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் பேசிய நிதியமைச்சர், நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கி மூலம் … Read more

நான் எச்சரித்ததை இப்போது ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது – ராகுல் காந்தி குற்றசாட்டு.!

பல மாதங்களாக நான் எச்சரித்ததை ரிசர்வ் வங்கி இப்போது உறுதிப்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார். காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த கொடிய வைரஸ் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்துக்கும் என்று எச்சரித்துக் கொண்டே இருந்தார். மேலும், கொரோனா மற்றும் ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். இதனை … Read more

சபரிமலை கோயிலில் பாரிய தங்க இருப்புக்களைத் தட்ட திட்டம்! தங்கக் கடன்களுக்காக ரிசர்வ் வங்கியை அணுக டி.டி.பி முடிவு!

சபரிமலை கோயிலில் பாரிய தங்க இருப்புக்களைத் தட்ட திட்டம். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை கோயிலில் எழும் நிதி நெருக்கடியின் காரணமாக, அதன் பெட்டகங்களில் பாரிய தங்க இருப்புக்களைத் தட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், திருவாங்கூர் தேவசோம் வாரியம் (டி.டி.பி) தங்கக் கடன்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கியை அணுக திட்டமிட்டுள்ளது. பெரியார் புலி ரிசர்விற்குள் உள்ள மலைகளில் அமைந்துள்ள சபரிமாலாவில் உள்ள லார்ட் அய்யப்பா கோயில் இந்திய பணக்கார கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில், பல ஆண்டுகளாக பிரசாதங்களில் … Read more

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 %பணம் கடனாக வழங்கப்படும் -ரிசர்வ் வங்கி ஆளுநர்

வங்கிகளில் அடகு வைக்கும் தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் பணம் கடனாக வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். பணவியல் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகு சக்தி காந்ததாஸ் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு, முக்கிய கடன் விகிதங்களான ரெப்போ வீதம் மற்றும்  ரிவர்ஸ் ரெப்போ ரெப்போ வீதம் மாறாமல் உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த … Read more

இந்த மாதம் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா? இதோ விடுமுறை பட்டியல்!

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்து வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் வேறுபடுகின்றன. வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் அறிவிப்பையும் சார்ந்துள்ளது. ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல் ஆகஸ்ட் 3, 2020 (திங்கள்) – ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 11, 2020 (செவ்வாய்) … Read more

“கூகுள் பே” செயலிக்கு ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் தேவையில்லை- கூகுள்!

கூகுள் பே செயலிக்கு ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் தேவை இல்லை என கூகுள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல கோடி மக்கள், தங்களின் அன்றாட பணப்பரிவர்த்தனை தேவைகளுக்காக கூகுள் பே செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் செலுத்துவது, பணம் பெறுவது, கட்டணங்கள் செலுத்துவது, போன்ற வேலைகளை செய்யலாம். அவ்வாறு வரும் பணம், நேரடியாக உங்கள் வாங்கி கணக்கு செல்லும். இந்த நிலையில் கூகுள் … Read more

எச்சரிக்கும் RBI.. அதிகரிக்கும் இணைய மோசடி.. இதை செய்துவிடாதீர்கள்..

சமீபத்தில் பில் கேட்ஸ், எலோன் மஸ்க் போன்ற பல போன்ற நபர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது. இந்த மிக மோசமான சைபர் தாக்குதல்களுக்குப் பிறகு, சைபர் குற்றங்கள் மற்றும் அடையாள திருட்டுக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று காலை இந்திய ரிசர்வ் வங்கிதனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், மத்திய வங்கி இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க … Read more

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேர் தேர்வு! ஜூலை 23-ல் நேர்காணல்!

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பதவிக்கு 8 பேர் தேர்வு. என்.எஸ்.விஸ்வநாதன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பணிபுரிந்து வந்தார். இவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்ட காலம் முடிவடைவதற்கு முன்பதாகவே, மார்ச்-3ம் தேதி இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, காலியான பணியிடத்துக்கு, துணை ஆளுநரை நியமிப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, நிதித்துறை நியமனங்களுக்கான தேடல் குழு, 8 பேரின் பெயர்களை இறுதி செய்துள்ளது. இவர்களுக்கு, வரும் 23-ம் தேதி காணொளி வாயிலாக நேர்முகத்தேர்வு … Read more

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி – ரிசர்வ் வங்கி ஆளுநர்

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது.இதனிடையே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உரையாற்றினார்.அவரது உரையில் ,கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால்   உற்பத்தி,வேலை வாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது.நிதி அமைப்பை … Read more