வங்கிகளில் அரசு தலையீடு…ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் பரபரப்பு கருத்து …!!

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில்அரசாங்கம் தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் என ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆச்சார்யா தெரிவித்துள்ளதால் அரசு அதிருப்தியடைந்துள்ளது. கடந்த வாரம் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு காரணமாக இருக்கும் எனத் தெரிவித்தார். 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளதை வைத்தே இந்த  ஆச்சார்யா பேசியதாகக் கூறப்படுகிறது. … Read more

ரூ 2,000,00,00,000….கண்டெய்னரில் பணம்… நள்ளிரவில் நடு ரோட்டில் பரபரப்பு….!!

சென்னைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுக்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி பழுது காரணமாக நள்ளிரவில் சாலையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  மைசூரில் இருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. சென்னை அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த லாரி திடீரென பழுதாகி நின்றது. சோதனையில் கியர் பாக்சில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது. அதை உடனே சரிசெய்ய முடியாததால் கண்டெய்னர் … Read more

கடும் பொருளாதர சரிவை மத்திய அரசும்..!ரிசர்வ் வங்கியும் மெத்தனமாக கையாளுகிறது..!நிபுணர் குழு..!

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவை சரிகட்டும் போக்கினை ரிசர்வ் வங்கி குறைத்துக்கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு, 70 ரூபாய்க்கும் கீழே சரிந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 80 காசாக உள்ளது.இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவை சரிகட்ட இந்திய ரிசர்வ் வங்கி போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என பொருளாதார நிபுணர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.துருக்கி நாட்டின் சூழலை காரணமாக … Read more

ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநரகிறார்..!ஆடிட்டர் குருமூர்த்தி..!!

துக்ளக் இதழின் ஆசிரியான குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். துக்ளக் இதழின் ஆசிரியராக இருந்த சோ கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்தார். சோ மறைவிற்கு பிறகு துக்ளக் இதழை ஆடிட்டர் குருமுர்த்தி கவனித்து வந்தார்.குருமூர்த்தி ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சரவையால் அமைக்கப்பட்ட குழு இவருடைய நியமனத்தை உறுதி செய்துள்ளது.4 வருடத்திற்கு இப்பதவியில் நீடிப்பார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குருமூர்த்தி,   Story of my … Read more

வெளியிட்ட மொத்த ரூபாயில் 95% பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ளது ! RBI தகவல்..!

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000  ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது, புழக்கத்தில் இருந்த பண மதிப்பில் 86 சதவிகிதம் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்கள். அதன் பின்னர், புதிய 2000, 500, 200 ரூபாய்கள் அச்சடித்து வெளியிடப்பட்டன. அதிக தேவை இருந்த நிலையில், 500 ரூபாய் நோட்டுகள் கூடுதலாக அச்சடிக்கப்பட்டன. செல்லாத நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் … Read more

பார்வையற்றவர்கள் பணத்தை எளிதில் அடையாளம் புதிய வழி ! ரிசர்வ் வங்கி தகவல்..!

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பணத்தாள்களை எளிதில் அடையாளம் காணுவது குறித்த மாற்று வழிகளை ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பணத்தாள்களுக்கு இடையேயான மதிப்பை பகுத்தறிய சற்று மேலெழும்பிய வகையிலான அச்சு பயன்படுத்தப்படுகிறது. புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் இரு பக்க ஓரத்திலும் 7 கோடுகள் இதற்காக உள்ளன. ஆனால், புதிய 50 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை  அடையாளம் காண்பதில் சிரமம் இருப்பதாக புகார்கள் … Read more

வீட்டுக்கடன்,வட்டி விகிதங்கள் உயர்த்திய வங்கிகள்….பொதுமக்கள் அவதி..!

கடன் வட்டி விகிதங்கள் குறித்த தனது கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இதில் குறுகிய கால வட்டி விகிதங்கள் 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் ரெப்போ ரேட் 6.25 சதவீதமாக உயர்ந்தது. 4½ ஆண்டுகளுக்கு பிறகு இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த வட்டி விகித உயர்வு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் … Read more

பயனாளியின் விவரம் சரிபார்க்க..!! இனி ஆதார் கட்டாயம்..!!

நிதி மோசடிகளை தடுக்கும் வகையில், வங்கி மற்றும் நிதி நிறுவன வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்ப்பதற்கான வழிமுறைகளில், ரிசர்வ் வங்கி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு, இனி ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படும். நிதி மோசடிகளை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு ஏதுவாக, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், நீதிமன்ற உத்தரவுக்கேற்ப இது மாறுதலுக்கு உட்பட்டது என்று கூறியுள்ளது. இது, எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை … Read more

பழைய ரூபாய் நோட்டுகளை அழிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி !

பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை துண்டுகளாக்கி அழிக்கும் பணி நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, 15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த நோட்டுகளின் நிலை … Read more