மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார். அப்போது யெஸ் வங்கியில் முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்தார். இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் வரும் மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்தார். இதனிடையே வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் … Read more

புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும் – ரிசர்வ் வங்கி தகவல்.!

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் எஸ் வங்கியுடன் கூட்டு வைத்திருந்த போன்பே சேவை பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் தான் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து வருவதாகக் குறிப்பிட்டார்.  மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யெஸ் வங்கியின் அனைத்து … Read more

வருகிறது 550 ரூபாய்க்கு நாணயம்..!உறுதிபடுத்திய மத்திய அரசு.!

இந்தியாவில் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.புழக்கத்தில் தற்போது 1,2,5,10 ரூபாய் நாணயங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் விரைவில் 550 ரூபாய் நாணயம் வெளியாக உள்ளது. என்று தெரிவித்ததோடு இந்த நாணயம் சீக்கியர்களின் முதன்மை குருவான குருநானக் பிறந்து 550 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவரை சிறப்பிக்கும் விதமாக  இந்த 550 ரூபாய் நாணயம் வெளியிட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இந்த நாணயம் 35 கிராம் எடை கொண்டிருக்கும் … Read more

புதிய 20 ரூபாய் நோட்டு….ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, ரிசர்வ் வங்கி புதிய வகையிலான  10, 50, 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி வெளியிட்டுள்ளது.அதோடு மட்டுமில்லாமல் புதிதாக 200 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என்ற புதிய வகை நோட்டுகளையும் அறிமுகம் செய்தது. தற்போது ரிசர்வ் வங்கியின் ஆவணப்படி, கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் … Read more

மாற்றியமைக்கப்படும் 20 ரூபாய் நோட்டு..!!!புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டம்..!

புதிய 20 ரூபாய் நோட்டை கூடுதல் அம்சங்களுடன் விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில்  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரிசர்வ் வங்கியானது புதிய 10, 50 மற்றும் 100 ,500 ஆகிய ரூபாய் நோட்டுகளை ஏற்கனவே வெளியிட்டது. இதேபோல 200 , 2000 ரூபாய் புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தியது.இந்த ரூபாய் எல்லாம் நவம்பர் 2016 முதல் நாட்டில் புழக்கத்தில் வந்தது. முன்பிருந்த ரூபாய் நோட்டுகளை ஒப்பிடும் போது  இவற்றின் அளவு மற்றும் வடிவமைபானது சற்று வேறுபட்டு … Read more

நாட்டின் பொருளாதார சவால்களை ரிசர்வ் வங்கியும், அரசும் இணைந்து எதிர்கொள்ளும் – சக்திகாந்த தாஸ்…!!

அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான முந்தைய உறவு குறித்து கருத்து கூற முடியாது என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நேற்று பதிவியேற்று கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு ஒரு பங்குதாரர் மட்டுமல்ல, நாட்டின் நிதிநிலையை நிர்வகிக்கும் சூழல் அரசுக்கும் உள்ளதாக கூறினார். வங்கித் துறையை நிர்வகிப்பது மட்டுமின்றி நாட்டின் பொதுவான நிதிநிலையை கண்காணிப்பதும் ரிசர்வ் வங்கியின் … Read more

ரூ20,00,00,00,00,00,00…..பணமதிப்பிழப்புக்குப் பின் பணப்புழக்கம்….இந்திய ரிசர்வ் வங்கி தகவல்…!!

உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் பணப்புழக்கம் 20 லட்ச கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணப்புழக்கம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு பணப்புழக்கம் 17 லட்சத்து 97 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போது புதிதாக 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரையிலான … Read more

டெல்லியில் இன்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வுக் கூட்டம்…!!

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. குறுகிய கால கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் ரிசர்வ் வங்கி மறுத்து வருகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொழில் மேம்பாடு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. முதலீடுகள் … Read more

ரிசர்வ் வங்கி ராகுல் டிராவிட் போல செயல்பட வேண்டும்….!!

ராகுல் டிராவிட் போல ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும், சித்து போல் இருக்க கூடாது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட், பொறுமையாக விளையாடி, தன் அணிக்கு வலுவான தளம் அமைத்துக் கொடுப்பது போல, ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும்”  என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் … Read more

எங்களுடன் இணங்கவில்லை என்றால் பதவி பறிபோகும்…..ஆர்.பி.ஐ யை மிரட்டும் ஆர்.எஸ்.எஸ்..!!!RBI நிலை என்ன?..!!

மத்திய அரசுடன்  ரிசர்வ் வங்கி  இணைந்து பணியாற்றா விட்டால் ஆளுநர் பதவி விலக வேண்டுமென ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவுத் தலைவர் அஷ்வனி மகாஜன் விடுத்துள்ள அறிக்கையில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் இணைக்கமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.அவ்வாறு இணங்கி செயல்பட முடியாவிட்டால் உடனே  ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் அப் பதவியில் இருந்து விலக வேண்டுமென கூறியுள்ளார். மேலும் இது குறித்து … Read more