தனது சம்பளத்தை கல்வி, விவசாயிகளின் மகள்களுக்கு வழங்குகிறேன் – ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் தனது ராஜ்யசபா சம்பளத்தை கல்வி, விவசாயிகளின் மகள்களின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதன்பின், பஞ்சாபில் 5 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளராக முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் போட்டியிட்ட நிலையில், ஹர்பஜன் … Read more

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு. டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளைக்கு பதில் முன்கூட்டியே இன்றே முடித்துக்கொள்ளப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து அலுவலகங்களும் ஏற்கனவே முடிந்ததால் இன்றுடன் முடிவு பெற்றது. மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த ஜனவரி 31ம் தொடங்கி, பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னா் கூட்டத்தொடரின் முதல் … Read more

#BREAKING: மாநிலங்களைவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் பி.வில்சன்!

நாடாளுமன்றம் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார் பி.வில்சன். டெல்லி நாடாளுமன்றம் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை திமுக உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்தார். அதாவது, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-ல் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் இதுபோன்ற சட்டத்தை நிலுவையில் வைக்க கூடாது என்றும் இது … Read more

மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் – மத்திய நிதியமைச்சர்

நிதி வருவாயை பெருக்குவதற்காக வரியை உயர்த்தமாட்டோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி. டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களை மீட்க தொடர்ந்து செலவிட வேண்டியுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசலுக்காக மக்கள் தொடர்ந்து அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். பெட்ரோல், … Read more

ஓர் அலசல்! மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? இதோ!

டெல்லி நாடாளுமன்றம் மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? என்பது குறித்த ஓர் அலசல். மாநிலங்களவை தேர்தல்: நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, பஞ்சாப்பில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, இமாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்தில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது. … Read more

இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி சேவை – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அறிவிப்பு. இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிரிபார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அறிவித்திருக்கிறார். கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர், 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்காக நான்கு நிறுவனங்களுக்கு சோதனை நடத்துவதற்காக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனைகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். … Read more

#Breaking:சற்று முன்…நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி மத்திய  பட்ஜெட் கூட்டத் தொடரானது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. அதன்பின்னர்,மத்திய பட்ஜெட்டைபிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள்வெளியாகின. இதனையடுத்து,பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11 ஆம் தேதியில் நிறைவடைந்தது.கொரோனா பரவல் காரணமாக முதல் அமர்வு காலையில் மாநிலங்களவையும்,மாலையில் மக்களவையும் செயல்பட்டன. இந்நிலையில்,மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு … Read more

#BREAKING: பிப் 1 காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு. இந்திய நாடாளுமன்றத்தின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை) கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தமது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் … Read more

நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

கூட்டத்தொடர் 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தொடர் அமளியால் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் … Read more

நாடாளுமன்றத்தில் 16 ஆவது கூட்டத்தொடரில் விவசாயிகள் பிரச்சனை முடக்கம்..!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் தொடர்பாக  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இன்று விவசாயிகள் பிரச்சனை முடங்கியுள்ளது.  கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கவும் திட்டமிட்டிருந்தனர்.  பின்னர் இன்று நடந்த கூட்டத்திலும் … Read more