#BREAKING: பிப் 1 காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு.

இந்திய நாடாளுமன்றத்தின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை) கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தமது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலையில் மாநிலங்களவை, மாலையில் மக்களவை கூடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரை இடம்பெறவுள்ள நிலையில், மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது. மேலும், பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் மாநிலங்களவை காலை 9 மணிக்கும், மக்களவை மாலை 4 மணிக்கு நடைபெறும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்