இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி சேவை – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அறிவிப்பு.

இந்தியாவில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விரைவில் நடத்தப்படும் என்றும் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிரிபார்க்கப்படுவதாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் அறிவித்திருக்கிறார்.

கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர், 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்காக நான்கு நிறுவனங்களுக்கு சோதனை நடத்துவதற்காக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனைகள் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இந்த ஆண்டு தனது 4ஜி சேவையைத் தொடங்கும் என்றும் தெரிவித்தார். தொலைத்தொடர்பு பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் (BSNL and MTNL) நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான கார்ப்பரேஷனின் 4ஜி சேவைகள் தொடங்கப்படுவதால் பிஎஸ்என்எல் சேவைகளின் தரமும் மேம்படும் என்றும் கடந்த 7 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் ஒரு “பெரும் புரட்சி” ஏற்பட்டுள்ளதாகவும்,கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கும்போது தரவு நுகர்வு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்